ARTICLE AD BOX
தலைமுடியில் எண்ணெய் தடவுதல் என்பது காலம் காலமாக நாம் பின்பற்றும் முறை தான். இதில் என்ன தவறும், பிரச்சனையும் வந்து விட போகிறது என யோசிக்கிறீர்களா? அது தான் தவறும். தலையில் எண்ணெய் வைப்பது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது. இது முடியை நீண்டதாக, அடர்த்தியாக, மின்னும் வகையில் வளர்க்க உதவுகிறது. தலைமுடிக்கு மற்றும் அதன் வேர்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதோடு, நன்கு ஈரப்பதம் சேர்க்கும் செயலையும் இது செய்யும். எண்ணெய், தலைமுடிக்குள் ஊடுருவி அதன் வளர்ச்சிக்கான முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. முடிக்கூறுகளை ஈரப்பதமாக வைத்திருக்கிறது மற்றும் முடி உடைவதை தவிர்க்க உதவுகிறது.
ஆனால், தவறான முறையில் எண்ணெய் பயன்படுத்துவது, முடி ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கலாம். உங்கள் முடியை பாதுகாக்க, எண்ணெய் தடவும் போது தவிர்க்க வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய தவறுகள் மற்றும் முடி பாதுகாப்பு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
எண்ணெய் தடவும் போது தவிர்க்க வேண்டிய தவறுகள் :
1. அதிகமாக எண்ணெய் தடவ கூடாது. - கொழுப்பு நிறைந்த தலைமுடியும், எண்ணெய் நிறைந்த வேர்க்கால்களும் கொண்டவர்களுக்கு, அதிக எண்ணெய் தடவுவது பிரச்சனைகளை அதிகரிக்கக் கூடும். இது வேர்கால்களில் துளை மறைப்பு ஏற்படுத்தி, அழுக்கு மற்றும் தூசி சேர்க்க, இருமல் மற்றும் தோல் எரிச்சல் உருவாகலாம். இதனால், அதிக எண்ணெய் சேர்க்காமல் லேசான எண்ணெய்யை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
2. எண்ணெய் தடவி இரவு முழுவதும் வைத்திருக்க கூடாது - எண்ணெய் தடவி இரவு முழுவதும் வைத்தால், அது தலையில் பொடுகு, அழுக்கு, மற்றும் தூசி தேங்கி முடி பாதிக்க வாய்ப்பு அதிகமாகும். அதிக நேரம் எண்ணெய் தலை முடியில் இருக்கும்போது, அது துளைகள் அடைத்துவிடும் மற்றும் முடி உதிர்தல் அதிகரிக்க செய்யலாம். சிறந்த முறை, தலைமுடிக்கு எண்ணெய் தடவிய 2 முதல் 3 மணிநேரத்தில் அலசி விடுவது நல்லது.
3. பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் எண்ணெய் தடவ வேண்டாம். வறண்ட தோல் மற்றும் பொடுகு உள்ளவர்கள், எண்ணெய் பயன்படுத்தினால் பிரச்சனை மேலும் மோசமாகலாம். எண்ணெய் தலைபொடுகில் உள்ள வறண்ட தோலை அதிகரிக்கச் செய்து, இருமல் மற்றும் எரிச்சலை அதிகரிக்கலாம்.
இதற்கு பதிலாக, வீட்டிலேயே தயார் செய்யும் இயற்கையான ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது சிறந்த தேர்வாகும்.
4. அதிகமாக முடியை மசாஜ் செய்ய வேண்டாம் . அதிக நேரம் முடியை மசாஜ் செய்வதால், முடி உடைவதற்கு காரணமாகவும், முடி வளர்ச்சிக்கான முடிக்கூறுகளை பலவீனமாக மாற்றும். மேலும், முடி சிக்கி விடலாம் மற்றும் அதிகமாக உடைந்து போகும். இதனால், மிதமான அளவில், மெதுவாக, வாரத்தில் ஒருமுறை மட்டும் முடியை மசாஜ் செய்யலாம்.
5. எண்ணெய் தடவிய பிறகு முடியை இறுக்கமாக கட்ட கூடாது. எண்ணெய் தடவிய பிறகு முடி மிகவும் மென்மையாக மாறிவிடும். இந்நிலையில் முடியை இறுக்கமாக கட்டினால், முடி உதிர்வு அதிகரிக்கும் மற்றும் முடியின் வேர்கள் வேகமாக பலவீனமாகும். இதைத் தவிர்க்க, மெதுவாக, லூசாக முடியை கட்டுவது நல்லது.
முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க எண்ணெய் தடவும் சிறந்த முறைகள் :
* வாரத்திற்கு 1-2 முறை மட்டுமே எண்ணெய் தடவுங்கள்
* எண்ணெயை தடவிய பிறகு 2-3 மணிநேரத்திற்குள் அலசுங்கள்
* பொடுகு உள்ளவர்கள் எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை மாஸ்க் பயன்படுத்துங்கள்.
* மிதமான அளவில் மட்டுமே மசாஜ் செய்யுங்கள்.
* முடியை மெதுவாக கட்டி, அழுத்தம் கொடுக்காமல் வைத்திருங்கள்.
தவறான முறைகளை தவிர்த்து, முடியை ஆரோக்கியமாக வளர்க்க எண்ணெய் பயன்படுத்துங்கள்.