தயவு செய்து கவனியுங்கள்.. இன்சூரன்ஸ் எடுக்கும்போது CSR பார்க்குறது ரொம்ப முக்கியம்!

3 days ago
ARTICLE AD BOX

தயவு செய்து கவனியுங்கள்.. இன்சூரன்ஸ் எடுக்கும்போது CSR பார்க்குறது ரொம்ப முக்கியம்!

Chennai
oi-Oneindia Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: லைஃப் காப்பீடு பாலிசி எடுக்கும்போது, க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோவை (Claim Settlement Ratio - கோரிக்கை தீர்வு விகிதம்) கட்டாயம் பார்க்கணும்னு நிபுணர்கள் சொல்றாங்க. இது எதுக்குன்னா, நீங்க கஷ்டப்பட்டு பணம் கட்டி பாலிசி எடுத்த பிறகு, உங்க குடும்பத்துக்கு அந்த பணம் கிடைக்குமா, கிடைக்காதான்னு தெரிஞ்சுக்க உதவும்.

க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோ என்றால் என்ன?

ஒரு வருஷத்துல ஒரு காப்பீட்டு கம்பெனிக்கு எவ்வளோ க்ளைம் வருதோ, அதுல எவ்ளோ க்ளைம்க்கு அவங்க பணம் கொடுக்குறாங்கன்னு சொல்றதுதான் இந்த ரேஷியோ. ரேஷியோ அதிகமா இருந்தா, அந்த கம்பெனி நல்லா க்ளைம் செட்டில் பண்ணுவாங்கன்னு அர்த்தம். கம்மியா இருந்தா கொஞ்சம் யோசிக்கணும்!

insurance finance bank

இது ஏன் முக்கியம்?

நம்மளோட குடும்பத்துக்கு ஒரு பாதுகாப்பு வேணும்னுதான் நம்ம இன்சூரன்ஸ் எடுக்குறோம். நம்மளுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா, அந்த பணம் நம்ம குடும்பத்துக்கு கரெக்டா கிடைக்கணும்ல? அதுக்கு இந்த ரேஷியோ முக்கியம். நல்ல ரேஷியோ இருந்தா, கம்பெனி நம்பகமான கம்பெனின்னு அர்த்தம்.

நிறைய வருஷம் பணம் கட்டிட்டு, க்ளைம் பண்ணும்போது கம்பெனி பணம் தரலைன்னா என்ன பண்றது? ரேஷியோவை பார்த்தா, கம்பெனி எப்படி க்ளைம் செட்டில் பண்றாங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.

எப்படி கணக்கு போடுறது?

க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோ = (ஒரு வருஷத்துல செட்டில் பண்ண க்ளைம்ஸ் எண்ணிக்கை / ஒரு வருஷத்துல வந்த மொத்த க்ளைம்ஸ் எண்ணிக்கை) x 100. உதாரணத்துக்கு, ஒரு கம்பெனி 10,000 க்ளைம்ல 8,000 க்ளைம் செட்டில் பண்ணிருந்தா, ரேஷியோ 80%.

எங்கு பார்ப்பது?

இந்திய இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி & டெவலப்மென்ட் அத்தாரிட்டியின் (IRDA) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களின் க்ளைம் செட்டில்மென்ட் விகிதத்தை நீங்கள் பார்க்கலாம். ஒவ்வொரு வருடமும், இங்கு அந்த தகவல் புதுப்பிக்கப்படும்.

கவனிக்க வேண்டியது

85% மேல ரேஷியோ இருந்தா, அந்த கம்பெனி நல்ல கம்பெனின்னு சொல்லலாம். 90% மேல இருந்தா ரொம்ப நல்லது. கம்பெனி வருஷா வருஷம் நல்ல ரேஷியோ மெயின்டெய்ன் பண்ணா, அதுவும் நல்லது. க்ளைம் செட்டில்மென்ட் ரேஷியோ காப்பீடு பாலிசி எடுக்கும்போது ரொம்ப முக்கியமான விஷயம். ஆனா, இதோட மட்டும் நிக்காம, பாலிசியோட கவர்ரேஜ், மற்ற அம்சங்களையும் பாருங்க. புரிஞ்சுக்கிட்டு பாலிசி எடுத்தா, உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் நல்லது!

More From
Prev
Next
English summary
Before purchasing a life insurance policy, it's essential to check the Claim Settlement Ratio (CSR) of the insurance company. CSR indicates the percentage of claims successfully settled by the company in a year. A higher CSR (above 90%) reflects the company’s reliability in settling claims, ensuring financial security for your family. You can verify the CSR of all insurance companies on the official website of the Insurance Regulatory and Development Authority of India (IRDAI). While CSR is a vital factor, also consider policy coverage and other benefits before making a decision.
Read Entire Article