'தமிழ்நாட்டை காக்கும் காவல் அரண் ஸ்டாலின்': கமல்ஹாசன்- தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்து

4 hours ago
ARTICLE AD BOX

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது 72 ஆவது பிறந்த நாளை மார்ச் 1 ஆம் தேதி கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நாளை பிறந்த நாள் காணும் தமிழ்நாடு முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், என்னுடைய அருமை நண்பர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன், நீண்ட காலம் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினேன். 

தமிழக மக்களும், தமிழ் மொழியும், தமிழர் பண்பாடும் பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளாகும் காலத்தில் தன் முன்னோர்களைப் போலவே தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரணாக உருவெடுத்திருக்கிறார் ஸ்டாலின், மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், நல்ல ஆரோக்கியத்துடன் நீடுடி வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read Entire Article