ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடியில் உருவாகும் காலனி உற்பத்தி ஆலை! 50,000 வேலை வாய்ப்புகள் வரப்போகுது!
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தைவானின் எவர்வன் குழுமத்துடன் இணைந்து செயல்படும் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட், தமிழகத்தின் எரையூர் மற்றும் கரூரில் லெதர் இல்லாமல் செய்யப்படும் காலணிகளை உருவாக்க ரூ.5000 கோடி முதலீடு செய்யவுள்ளது. அதற்காக பிப்ரவரி 26-ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தைவானின் ஷூடவுன் என்ற நிறுவனத்துடன் கொத்தரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுள்ளது.
ஃபீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனமும், தைவானின் ஷூடவுன் நிறுவனமும் சேர்ந்து, பெரம்பலூரில் "JR ஒன் ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட்" என்ற ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இங்கு க்ரோக்ஸ் பிராண்ட் காலணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக ரூ. 1,761 கோடி முதலீடு செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த உற்பத்தி ஆலையில் 20 லட்சத்திற்கும் அதிகமான ஜோடி காலணிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆலை வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் கொத்தரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ரஃபீக் அகமது கூறியுள்ளார்.

2027-ஆம் ஆண்டுக்குள் 2 கோடி காலணிகளை உற்பத்தி செய்து, தொழிற்சாலையில் 50,000-த்திற்கும் மேற்பட்டோரை பணியமர்த்த இருப்பதாகவும், தமிழ்நாட்டின் தெற்கு பக்கம் சுமார் 400 ஏக்கர் நிலத்தில் காலணிகளை உருவாக்க பிரத்தியேகமான தொழில்துறை பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அங்கு துணை தொழிற்சாலைகளும் அமைக்கப்படும் என்றும் ரஃபீக் அகமது கூறியுள்ளார்.
பிரதீப் தயானந்த் கோத்தாரி நிர்வாகக் குழுவில் இருந்து விலகிய பிறகு ஜெ. ரஃபீக் அகமது நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்னர் இந்நிறுவனம் நைட்ரஜன் பாஸ்பரஸ் பொட்டாசியம் போன்ற கலப்பு உரத்தை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அந்தத் திட்டத்தின் நிலை என்ன என்று ரஃபிக்கிடம் கேட்டபோது, அதற்கு அவர் இந்த திட்டம் இன்னும் செயல்பாட்டில் இருப்பதாகவும், கைவிடப்படவில்லை என்றும் பதிலளித்துள்ளார். இனிவரும் காலங்களில் உர தயாரிப்பு தொழிற்சாலை தொடர்பான தகவல்கள் வெளியாகும் வாய்ப்புள்ளது.
பொதுவாக ஒரு நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வந்தால், தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவும். தற்போது வரும் புதிய தொழிற்சாலையின் மூலமாக காலணி உற்பத்தி மற்றும் அது சார்ந்த தொழில்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.