ARTICLE AD BOX

பெரம்பலூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் விசிக நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசு நிதி ஒதுக்காத காரணத்தால் தமிழக அரசு கெட்டிக்காரத்தனமாக அனைத்து துறைக்கும் பட்ஜெட்டை ஒதுக்கி உள்ளது. ஒன்றிய அரசு கல்விக்கு என ஒதுக்கிய நிதியில் முக்கால் பங்கு தமிழக அரசு மாநிலத்திற்கு என்று ஒதுக்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் பட்ஜெட்டை ஓடாத வண்டி என்று விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக்கில் ரூபாய் 100 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அது வெறும் கையளவு நீர் தான் என்று தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார். டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை உள்நோக்கத்தோடு செயல்படும் பட்சத்தில் அதன் மீது வழக்குத் தொடரப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார். இதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம். ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும், தமிழகத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் பாஜக கூட்டணியில் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறு கூறி வருகிறார். பவன் கல்யாண் கருத்துக்களை தமிழகத்தில் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.