<p>வழக்கறிஞர்கள் திருத்த மசோதா 2025 என்பது சட்டத் தொழிலின் சுயாட்சியின் மீதான நேரடித் தாக்குதல் என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலை மெட்ராஸ் பார் கவுன்சில் என்று பெயர் மாற்றுவது "தமிழ்" மீதான பாஜகவின் வெறுப்பை காட்டுகிறது என அவர் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு என்பது வெறும் பெயர் அல்ல, அது தங்களின் அடையாளம் என அவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். </p>