Headlines | தவெக 2 ஆம் ஆண்டு தொடக்க விழா முதல் ஜெர்மனியில் Rose Monday அணிவகுப்பு வரை!

5 hours ago
ARTICLE AD BOX
Published on: 
26 Feb 2025, 1:39 am
  • நடைபெறுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா. தேர்தல் பயணம் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிட வாய்ப்பு.

  • தவெக தலைவர் விஜயை சந்தித்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை. கட்சியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் தொடர்பாக விவாதித்ததாக தகவல்.

  • தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் 8 மக்களவைத் தொகுதிகள் பறிபோகும் சூழல். வரும் 5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு.

  • மத்திய அரசு மீதான அச்சம் காரணமாகவே அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளதாக அதிமுகவின் ஜெயக்குமார் விமர்சனம். தொகுதி மறு வரையறையால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது பாஜகவின் கடமை என அண்ணாமலை விளக்கம்.

  • அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுக்க தயாரான ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ அமைப்புகள். வெள்ளிக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.

  • சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தும் திருத்த விதிகளுக்கு ஒப்புதல். புதிய விதிகள் குறித்து மார்ச் 9 ஆம் தேதிக்குள் பெற்றோர் கருத்து தெரிவிக்கலாம் என சிபிஎஸ்இ தரப்பில் விளக்கம்.

  • உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு. ஏராளமானோர் குவிந்து வருவதால், பிரயாக்ராஜில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.

  • 'நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை விளக்கம். போப் குணமடைய வேண்டிய இத்தாலியில் சிறப்பு பிரார்த்தனை.

  • ஜெர்மனியில் Rose Monday அணிவகுப்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மும்முரம். பார்வையாளர்களை கவரும் வகையில் தயாராகியுள்ள அலங்கார ஊர்திகள்.

  • ஐசிசி சாம்பியன் கோப்பை தொடரின் எலிமினேட்டராக மாறிய இன்றையப் போட்டி. இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை.

Read Entire Article