ARTICLE AD BOX
தமிழக அரசு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் மூலம் JEE Mains நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வழங்க உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் உடனே பதிவு செய்து, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்! தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மூலம் JEE Mains நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) இணைந்து நடத்துகிறது.
பயிற்சி திட்டத்தின் சிறப்பம்சங்கள்: தகுதியுடைய மாணவர்கள் : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்: 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணித பாடங்களில் 65% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
பிற இன மாணவர்கள்:75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4.00 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
இலவச சேவைகள்: பயிற்சி மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். உணவு, தங்குமிடம், 11 மாத பயிற்சிக்கான அனைத்து செலவுகளையும் CPCL ஏற்கும்.
விண்ணப்பிக்கும் முறை: மாணவர்கள் www.tahdco.com இணையதளத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
ஜாஃபர் எக்ஸ்பிரஸில் இருந்த 80 பேர் எங்கே..? சிக்கலில் பாகிஸ்தான் அரசு..!