தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்தது?: அன்புமணி கேள்வி

5 hours ago
ARTICLE AD BOX

சேலம்: தமிழை வைத்து அரசியல் செய்யும் திமுக, இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என்று அன்புமணி கேள்வி எழுப்பினார்.

சேலத்தில் நடைபெற்ற ஜி.கே.மணி இல்ல திருமண விழாவில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

விழாவில் மருத்துவர் அன்புமணி வாழ்த்துரை நிகழ்த்தினார்.

அப்போது, தமிழகத்தில் புதிய அரசியல் பிரச்னையாக மொழி பிரச்னை அதிகம் பேசப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்க முடியும் என்று மத்திய அரசு கூறுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது, அது தவறு என்றார்.

மத்திய அரசுக்கு மும்மொழி கொள்கை, திமுகவிற்கு இரு மொழி கொள்கை உள்ளது. ஆனால் பாமகவிற்கு ஒரு மொழி கொள்கைதான். எனவே தாய் மொழியை போற்றி வளர்ப்போம் என்று கேட்டுக்கொண்டார்.

நோபல் பரிசு பெற்றவர்களில் 90 விழுக்காட்டினர் சொந்த தாய் மொழி படித்து வந்தவர்கள் தான் என சுட்டிக்காட்டிய அன்புமணி, தமிழகத்தில் தமிழ் மொழியை காக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தமிழை வளர்க்க பாமக நிறுவனர் ராமதாஸ் அரும்பாடு பட்டு பல போராட்டங்களையும், நிகழ்சிகளையும் நடத்தினார்.

மக்கள் தொலைக்காட்சி தொடங்கிய பின்னர் தான் தமிழில் உள்ள வார்த்தைகள் பிற ஊடகங்கள் பயன்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் 45 சதவிகிதம் மட்டுமே அரசு பள்ளி உள்ளது. அரசின் கடமை கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்பது ஆனால் கடந்த 58 ஆண்டுகளில் 55 ஆயிரம் தனியார் பள்ளிகள் தமிழகத்தில் ஊடுருவி உள்ளது என்றார்.

2026 தேர்தலில் தவெக வரலாறு படைக்கும்! - விஜய்

அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் பாமக பங்கேற்கும்

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்கவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க மார்ச் 5 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் பாமக பங்கேற்கும்.

தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்தது?

தமிழை வைத்து அரசியல் செய்யும் திமுக, இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என்று அன்புமணி கேள்வி எழுப்பினார்.

எந்த மாநிலத்திலும் மொழியை திணிக்கக் கூடாது. தமிழகத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை ரூ. 4 லட்சம் கோடியாக உள்ளது. இதில் கல்விக்காக ரூ.45 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

மத்திய அரசுக்கு உரிமை கிடையாது

தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதும் ஏற்காமல் இருப்பதும் மாநில அரசின் உரிமை. தமிழகத்தில் ஒரு கொள்கையை மாற்றச் சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.

மேலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க மறுக்கும் தமிழக அரசு, அந்த நிதி தமிழகத்திற்கு வேண்டாம் என ஒதுக்க வேண்டியது தானே என்றார்.

Read Entire Article