கடன் கொடுத்த வங்கியிடமே.. லட்சங்களை வாங்கும் லக்கி நபர்.. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

4 hours ago
ARTICLE AD BOX

கடன் கொடுத்த வங்கியிடமே.. லட்சங்களை வாங்கும் லக்கி நபர்.. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

Chennai
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடன் தொகையை முழுமையாக செலுத்திய பின்னரும் விற்பனை பத்திரத்தை திரும்ப வழங்கவில்லை என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணையில், "ரிசர்வ் வங்கி விதிப்படி, கடனை திரும்ப செலுத்திய பின், பத்திரத்தை வழங்காததால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5000 இழப்பீடு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் வாடிக்கையாளருக்கு 2 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைக்கு பலரும் வீடு கட்ட கடன் வாங்குகிறார்கள்.கடன் வாங்கி வீடு கட்டும் போதும், வங்கிகள், கடனை கட்டும் வரை பத்திரத்தை அவர்கள் வைத்துக் கொள்வார்கள்..முன்பு கடன் வாங்கி வீடு கட்டிய பலர் இன்றைக்கு சென்னையில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.. 1998 களில் வெறும் 10 லட்சத்து வாங்கி கட்டிய வீடு இன்று வேளச்சேரியில் என்ன மதிப்பு தெரியுமா, அவர் கடனை கட்டிய மதிப்பை போல் பல மடங்கு உயர்ந்து விட்டது. கிட்டத்தட்ட அப்பார்ட்மெண்ட்டே கோடிகளில் போகிறது.

home loan High Court

இதனால் அவர் கற்பனையிலும் நினைத்து பார்க்காத அளவிற்கு நிலத்தின் மதிப்பும், அவரது வீட்டின் மதிப்பும் பல கோடி அளவிற்கு உயர்ந்து விட்டது. இப்படி கடன் முடியும் காலத்திற்குள்ளாகவே நிலம், வீட்டின் மதிப்பு பெருமளவில் உயரும் காரணத்தால் கடன் வாங்கியதாவது சொந்த வீடு வாங்கிவிட வேண்டும் என்று பலர் ஆர்வம் காட்டுகிறர்கள்.அதற்காக அவர்கள் வங்கிகளை நாடுகிறார்கள்.

ஆனால் வங்கிகளில் கடன் கட்டிய பின்னர் சரியாக பத்திரங்களை வாங்கி கொள்ள வேண்டும்.. அப்படி பத்திரங்களை தர மறுத்தால் நீதிமன்றத்தை நாடலாம்.. நீதிமன்றத்தை நாடினால்,கண்டிப்பாக அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் பத்திரத்தை ஒப்படைக்கவும் உத்தரவிடும்.

அந்த வகையில் கடன் தொகையை முழுமையாக செலுத்திய பின்னரும் விற்பனை பத்திரத்தை திரும்ப வழங்கவில்லை என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் "ரிசர்வ் வங்கி விதிப்படி, கடனை திரும்ப செலுத்திய பின், பத்திரத்தை வழங்காததால் ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5000 இழப்பீடு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் வாடிக்கையாளருக்கு 2 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

முன்னதாக கடன் தொகையினை முழுவதுமாக செலுத்திய பிறகும், அடமான ஆவணங்களை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்த தென்காசி பகுதியைச் சேர்ந்த வங்கிக்கு மதுரை ஐகோர்ட் கடந்த 3 வாரம் முன்பு கண்டனம் தெரிவித்தது. மேலும் ஏழை, எளிய மக்களை வங்கிகள் துன்புறுத்தக் கூடாது என்றும், அவ்வாறு செயல்பட்ட குறிப்பிட்ட வங்கி மேலாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் மாரித்துரை என்பவர் மரக்கடை தொழில் செய்ய விரும்பினார். இதற்காக மாரித்துரை தனியார் வங்கியில் ரூ.39 லட்சம் கடன் வாங்கி உள்ளார. அதை கட்ட முடியாததால், வங்கி அவரது சொத்துக்களை ஜப்தி செய்தது. இதையடுத்து கோர்ட் உத்தரவின் பேரில் பணம் முழுவதையும் மாரிமுத்து வங்கியில் செலுத்திய பிறகும் ஜப்தி செய்த சொத்துக்களை நீதிமன்றம் கொடுக்கவில்லை.

இது குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடன் தொகையை முழுவதும் செலுத்தியுள்ள போதும், அடமான ஆவணங்களை திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்த வங்கிக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் ஏழை, எளிய மக்களை வங்கிகள் துன்புறுத்தக் கூடாது என்றும், குறிப்பிட்ட வங்கி மேலாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டது.

More From
Prev
Next
English summary
Madras High Court orders a fine on the bank for refusing to return bonds despite loan repayment.
Read Entire Article