ARTICLE AD BOX
சென்னை: ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் ‘யுவன் ராபின் ஹூட்’ பூஜையுடன் தொடங்கியது ‘கேம்பஸ் கிராண்டி’, ‘ஸ்டூடண்ட்ஸ்’, ‘பிருந்தாஸ் கூக்லி’ ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் எழுதி இயக்கி, பேஷன் மூவிஸ் சார்பில் தயாரிக்கும் முதல் தமிழ்ப் படத்திற்கு ‘யுவன் ராபின் ஹூட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மூலம் கன்னட நடிகர் வீரன் கேஷவ் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக பாலிவுட் நடிகை அல்பிஃயா ஷேக் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரித்விகா, பொன்வண்ணன், ஸ்ருதி சுதிர், தேஷ்பாண்டே, சந்திர சேகர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இசை: மார்டின் கிளமண்ட். ஒளிப்பதிவு: மேத்தீவ் ராஜன்.