ARTICLE AD BOX
தனுஷ் ஐஸ்வர்யாவை பிரிந்திருக்கக்கூடாது.. பெரிய தவறு.. ரஜினி மாமனிதர்.. பிரபல நடிகர் ஓபன் டாக்
சென்னை: தனுஷும் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களது திருமணம் கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா எனும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருமே இப்போது வளர்ந்துவிட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில் தனுஷ் - ஐஸ்வர்யா கடந்த வருடம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார்கள். அவர்களது விவாகரத்து பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. இந்நிலையில் இவர்களின் விவாகரத்து குறித்து பிரபல நடிகர் ரமேஷ் கண்ணா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
ரஜினிகாந்த்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் திரைப்படத்தை பார்த்து வெகுவாக ரசித்தார். அதனைத் தொடர்ந்து தனுஷை சந்தித்து தனது வாழ்த்தினையும் பகிர்ந்துகொண்டார். அப்போது இரண்டு பேருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் அந்தக் காதலுக்கு முதலில் ரஜினியும் அவரது மனைவி லதாவும் ஒத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் தங்களுடைய மகள் விடாப்பிடியாக இருந்ததன் காரணமாக தனுஷ் - ஐஸ்வர்யா திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார்கள். அதன்படி கடந்த 2004ஆம் ஆண்டு இரண்டு பேரின் திருமணமும் சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
காதல் வாழ்க்கை: திருமணத்துக்கு பிறகு இரண்டு பேருமே தங்களது வாழ்க்கையை அமைதியாகவும், காதலாகவும் நகர்த்தினார்கள். அந்தக் காதலின் அடையாளமாக இவர்களுக்கு யாத்ரா, லிங்கா எனும் இரண்டு மகன்கள் பிறந்தார்கள். தனுஷின் நடை, உடை, பாவனை, பேசும் விதம் என அத்தனையையும் உயர்ந்த தரத்துக்கு மாற்றினார் ஐஸ்வர்யா. அதனை தனுஷே பல மேடைகளில் ஒத்துக்கொண்டிருக்கிறார். அதேபோல் ஐஸ்வர்யாவுக்குள் இருந்த இயக்குநர் ஆசைக்கு தனுஷ் முட்டுக்கட்டை போடாமல்; ஹீரோவாக நடித்துக்கொடுத்தார்.

பிரச்னை: இப்படி வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட தொடங்கியது. அந்தப் பிரச்னைக்கு ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன. முக்கியமாக தன்னுடைய பெற்றோருக்கு ரஜினியின் வீட்டில் மரியாதை கொடுக்கப்படுவதில்லை என்கிற எண்ணம் தனுஷுக்கு வந்ததுதான் இந்தப் பிரச்னையின் ஆரம்பப் புள்ளி என்று சொல்லப்படுகிறது. இது ஒருபக்கம் இருக்க; தனுஷின் நடத்தையில் கொஞ்சம் ஒழுக்கம் தவறியதுதான் ஆரம்பம் என்று இன்னொரு தகவலும் ஓடியது.
{image- tamil.filmibeat.com}
பிரிந்த தம்பதி: சிறிதாக ஆரம்பித்த பிரச்னை இரண்டு பேருக்குள்ளும் நாளடைவில் வளர ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் முற்றியது. இதன் காரணமாக சில வருடங்களுக்கு முன்பு அவர்கள் பிரிவதாக அறிவித்தார்கள். ஆனால் விவாகரத்து எதுவும் கேட்டு நீதிமன்றத்துக்கு செல்லவில்லை. இதனால் கண்டிப்பாக அவர்களை சேர்த்து வைத்துவிடலாம் என்று குடும்பத்தினர் தீவிரமாக முயற்சித்தார்கள். கஸ்தூரி ராஜாகூட, 'எல்லா குடும்பத்துக்குள்ளும் வரும் பிரச்னை போல்தான் இதுவும்' என்றார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த்தும் இவர்களை எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டுமென பலதரப்பட்ட முயற்சிகளில் இறங்கியதாகவும் ஒரு தகவல் தொடர்ந்து ப்ரவிக்கொண்டிருந்தது. எனவே கண்டிப்பாக தனுஷும், ஐஸ்வர்யாவும் இணைந்துவிடுவார்கள் என்று ரசிகர்களும் உச்சக்கட்ட நம்பிக்கையோடு இருந்தார்கள்.

விவாகரத்து: யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக கடந்த வருடம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இரண்டு பேரும் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்தார்கள். முதலில் இரண்டு பேரும் சில விசாரணைகளுக்கு ஆஜராகவில்லை. எனவே அவர்களுக்கு விவாகரத்தில் விருப்பமில்லை போல என்று கருத்துக்கள் எழுந்தன. ஆனால் அவர்கள் ஒருமுறை ஆஜராகி தங்களுக்கு விவாகரத்தில் பரிபூரண சம்மதம் என்று கூறியதன் காரணமாக நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்தை சட்டப்பூர்வமாக வழங்கியது. இது இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் உச்சக்கட்ட அதிர்ச்சியை கொடுத்தது.
அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த வெங்கட்பிரபு..விரைவில் சென்னை 600028 பார்ட் 3.. குஷியில் ரசிகர்கள்!
ரமேஷ் கண்ணா பேட்டி: இந்நிலையில் இவர்களது விவாகரத்து குறித்து பிரபல நடிகரும், இயக்குநருமான ரமேஷ் கண்ணா அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் சில வருடங்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஐஸ்வர்யாவை தனுஷ் பிரிந்திருக்கக்கூடாது. அது மாபெரும் தவறு. ரஜினிகாந்த் ஒரு மாமனிதர். எவ்வளவு போராட்டங்களை சந்தித்து அவர் இன்று இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்கிறார் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
தனுஷ் போல வந்திருக்க வேண்டியவரு.. துள்ளுவதோ இளமை நடிகருக்கு இப்படியொரு நோயா?.. நடிகர் சங்கம் உதவுமா?
குழந்தைகளுக்காக யோசித்திருக்க வேண்டும்: கணவன், மனைவிக்குள் பிரச்னைகள் வருவது என்பது சாதாரணம்தான். அதற்கு விவாகரத்து தீர்வில்லை. எனக்கும் எனது மனைவிக்கும்கூடத்தான் பிரச்னை வரும். ஆனால் நாங்கள் பிள்ளைகளுக்காக அட்ஜஸ்ட் செய்துகொள்வோம். அவர்களும் அப்படி பிள்ளைக்களுக்காக அனுசரித்து போயிருக்க வேண்டும். இத்தனை வருடங்கள் வாழ்ந்த பிறகு அவர்கள் பிரிந்திருக்கக்கூடாது. தனுஷும் ஒரு பக்குவமான மனிதர்தான். ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை.
தமன்னா - விஜய் வர்மா காதல் பிரேக் அப்.. என்ன காரணம் தெரியுமா?.. பிரச்னை பெருசுதான் போல
லிங்காவை பிடிக்கும்: ரஜினிகாந்த்துக்கு அவருடைய பேரன் லிங்காவை ரொம்பவே பிடிக்கும். அண்ணாத்த படத்தை பார்த்துவிட்டு தாத்தா தாத்தா என்று தன்னிடம் இருந்ததாக அவரே கூறியிருக்கிறார். லிங்கா படத்துக்கு பெயர் அவரது பேரனின் பெயர் என்பதால் உடனே ரஜினிகாந்த் ஒத்துக்கொண்டார். தந்தை - மகனின் பாசத்தை கூட பிரித்துவிடலாம். ஆனால் தாத்தா - பேரன் பாசத்தை பிரிக்கவே முடியாது. தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து கண்டிப்பாக ரஜினிக்கு மிகப்பெரிய இழப்பாகத்தான் இருக்கும்" என்றார்.
முன்னதாக ரஜினிகாந்த் திரைத்துறைக்கு 50 வருடங்கள் நிறைவடைகிறது. அதனையொட்டி அவருக்கு எடுக்கப்படும் விழாவில் தனுஷும், ஐஸ்வர்யாவும் கலந்துகொள்வார்கள் என்று தகவல்கள் பரவின. ஆனால் இப்போது இரண்டு பேரும் சட்டப்பூர்வமாக பிரிந்துவிட்டதால் அது நடக்குமா என்ற கேள்விகளும் எழுந்தன. முக்கியமாக தனக்கு விழாவே வேண்டாம் எனும் முடிவுக்கு ரஜினி வந்துவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் பிரிவுக்கு முக்கிய காரணமே இரண்டு தரப்பிடமிருந்து வெளிப்பட்ட ஈகோதான் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது 3 பட சமயத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் கலந்துகொண்டார்கள். அப்போது ஒய் திஸ் கொலவெறி பாடலில் பெண்களை ஓவராக தாக்கியிருக்கிறார்களே என்று தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, "அவர்கள் ஒரு அளவுக்கு உண்மையை சொல்கிறார்கள். ஆனால் நாம் முழுவதுமாக உண்மையை வெளியில் சொன்னால் அவர்களால் தாங்க முடியாது" என்றார்.
தனுஷின் பதிலடி: அதற்கு உடனடியாக ரியாக்ட் செய்த தனுஷோ, "நீங்கள் ஓரளவுக்கு உண்மையாக சொல்லுங்க, முழுசா உண்மையை சொல்லுங்க, முழுசா பொய் சொல்லுங்க. எங்களுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. பாதிக்கப்பட்ட நாங்கள் பாடல் பாடுகிறோம். உங்களுக்கு என்ன பிரச்னை. பிடித்தால் கேளுங்கள் இல்லையென்றால் செல்லுங்கள்" என்று பதிலடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு பயங்கரமாக ட்ரெண்டாகியிருந்தது.