ARTICLE AD BOX
சென்னை,
தமிழ், மலையாளத்தில் 'டெக்ஸ்டர்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கதாநாயகனாக ராஜு கோவிந்த், நாயகியாக யுக்தா பிரேமி நடித்துள்ளனர். இந்தப் படத்தை சூரியன் ஜி இயக்கி உள்ளார். பிரகாஷ் எஸ்.வி. தயாரித்துள்ளார்.
இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படம் பிரபல ஹாலிவுட் கிரைம் திரில்லர் வெப் தொடரான டெக்ஸ்டரின் தொடர்ச்சி என்று இயக்குனர் சூரியன்.ஜி கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
'பிரபல ஹாலிவுட் வெப்சீரிஸ், 'டெக்ஸ்டர்'. சிறுவயதில் தனது அம்மாவை சிலர் பலாத்காரம் செய்து கொலை செய்ததைப் பார்க்கும் சிறுவன், பெரியவனான பிறகு அவர்களை தேடிக் கண்டுபிடித்து கொல்வான். இது அவனுக்கு மிகவும் பிடித்துவிடுவதால், தொடர்ந்து கொலைகள் செய்வான். அக்கதையின் தொடர்ச்சியாகவே இந்த படம் தயாராகி உள்ளது' என்றார்.