ARTICLE AD BOX
அனைத்து வகையான பள்ளிகளும் இன்று வழக்கம் போல செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்த பள்ளி கல்வித்துறை அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14.01.2025 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக்கருத்தில் கொண்டு 17.01.2025 அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அனைத்துக்கல்வி அலுவலகங்களுக்கும் பணி நாளாகும். எனவே அனைத்து வகை பள்ளிகள் மற்றும் அனைத்து கல்வி அலுவலகங்களும் இன்று செயல் படவேண்டும் என்று மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழகமே…! இன்று விடுமுறை கிடையாது… அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல செயல்படும்…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.