ARTICLE AD BOX
சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20.ஓவர்களில் 165 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 166 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அடுத்ததாக களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் தடுமாறிய நிலையில், அந்த தடுமாற்றத்தை வெற்றிக்கு உறுதுதியாக நிலைநிறுத்தி திலக் வர்மா 72 ரன்கள் எடுத்து மேட்ச் வின்னிங்ஸ் விளையாடினார். இவருடைய அதிரடி ஆட்டம் காரணமாக 19.2 ஓவர்களில் இந்தியா 166 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டி முடிந்த பிறகு பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் ” இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற இந்த 2-வது டி20 போட்டிஒரு சிறந்த போட்டி, ஏனென்றால், இந்த போட்டி இறுதி வரை பரபரப்பாக சென்றது. இந்திய அணி வெற்றிக்கு முழு காரணம் திலக் வர்மா தான். நாங்கள் எங்களால் முடிந்த அளவுக்கு விக்கெட்களை தொடர்ச்சியாக வீழ்த்தினோம்.
நாங்கள் எதை நினைத்து போட்டியில் விளையாட நினைத்தோமோ அது போலவே போட்டி இருந்தது. ஆனால், இறுதியில் இந்தியாவுக்கு போட்டி சாதகமாக அமைந்துவிட்டது. போட்டியில் இறுதி வரை போராடியதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் பேட்டிங் செய்த விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் என எதை சொல்வீர்கள் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் ” இந்திய அணி 3 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவது அவர்களுடைய வெற்றியின் ரகசியமாக நான் பார்க்கிறேன். அவர்களுடைய பந்துவீச்சை நன்றாக இருக்கிறது.
அவர்களை போலவே எங்களுடைய அணி பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறார்கள். சில தவறுகள் நடந்துவிட்டது. அந்த தவறுகள் அடுத்த சில போட்டிகளில் நடைபெறாமல் இருக்க நாங்கள் முயற்சி செய்வோம். தவறுகளை திருத்திக்கொண்டு 3-வது போட்டியில் சிறப்பாக செய்யப்படுவோம்” என அடுத்த போட்டியில் வெற்றி நிச்சயம் என்பது போல ஜாஸ் பட்லர் பேசியுள்ளார்.
மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி வரும் ஜனவரி 28-ஆம் தேதி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.