ARTICLE AD BOX

சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும், காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வரும் 27ஆம் தேதி வரை 99 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை இருக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
9 மாவட்டங்களில் மழை
வரும் 28ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
5 மாவட்டங்களில் மழை
மார்ச்1ம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.