பூமி மீது சிறுகோள் (Asteroid) மோதும் அபாயம்! சீனாவின் அறிவிப்பு!

3 hours ago
ARTICLE AD BOX

வழக்கமான கதை தான்! இதோ வருகிறது ஒரு அஸ்ட்ராய்ட், பூமி மீது மோதப் போகிறது என்று ஒரு பரபரப்புச் செய்தி முதலில் வரும். சில நாட்களுக்குப் பின்னர், “இல்லை. அது வேறெங்கோ போய் விட்டது” என்று இன்னொரு செய்தி வரும்!

‘புலி வருது’ கதை போல் இந்தச் செய்திகள் அர்த்தமற்ற செய்திகளாகி விட்டன!

சமூக ஊடகங்கள் இதைக் கையிலெடுத்துக் கொண்டு ஒரு ஆட்டம் ஆடி விடுவதைப் பார்க்கிறோம்.

இப்போது லேடஸ்ட் செய்தி அஸ்ட்ராய்ட் 2024 YR4!

2024 டிசம்பர் 27ம் தேதியன்று கவனிக்கப்பட்ட இது நாஸாவின் ரிஸ்க் லிஸ்டில் அபாயப் பட்டியலில் டிசம்பர் 31ம் தேதி வைக்கப்பட்டது!

இதற்கு போனஸ் செய்தியாக இன்னொரு அபாய அஸ்ட்ராய்ட் Apophis-ம் கண்டுபிடிக்கப்பட்டு அதுவும் பூமியின் மீது 2029ல் மோதலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டு இப்போது “அது மோதாது; பூமிக்கு ஒரு அபாயமும் இல்லை” என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

2024 YR4 பற்றி க்ளோபல் ஸ்பேஸ் ஏஜன்ஸி தெரிவிக்கும் தகவல் ஆறுதல் அளிக்கிறது: 130 அடியிலிருந்து 300 அடி வரை குறுக்களவு கொண்டுள்ள இந்தக் சிறுகோள் பூமி மீது மோதுவதற்கான வாய்ப்பு 2.1 சதவிகிதம்தானாம்! 97.9% இது பூமியை விட்டுத் தள்ளிச் சென்று விடுமாம். 2032 வாக்கில் இது பத்திரமாக பூமியைத் தாண்டிச் சென்று விடுமாம்!

இதன் மீது படும் சூரிய ஒளியின் பிரதிபலிப்பை வைத்து இதைப் பற்றிய கணிப்புகள் அனைத்தும் வெளியிடப்படுகிறதாம்.

இதையும் படியுங்கள்:
7 கோள்களும் ஒரே நேர் கோட்டில்… இப்ப விட்டா இனி 2040ம் ஆண்டுதான் பார்க்கமுடியும்!
Asteroid

அரிஜோனாவிலிருந்து இதைக் கண்காணிக்கும் சிறுகோள் நிபுணரான விஞ்ஞானி டெட்டி கரேடா (Teddy Kareta), “ஒருவேளை இது கடலில் விழுந்து விட்டால் செய்தி ஊடகங்கள் வாயிலாக நீங்கள் இதை அறியலாம். சிறிய அளவு என்பதால் மக்கள் வாழும் பகுதியில் விழுந்தாலும் சேதம் அதிகம் இருக்காது. இது மோதப் போவதை முன்பே கணித்து அங்கு வாழும் மக்கள் வேறு பத்திரமான இடத்திற்குப் போகும்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறுகிறார்.

சீனா இப்படிப்பட்ட அபாயகரமான சிறுகோள்களை வேறு பக்கமாக திருப்பிவிடும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிக்கப் போவதாக அறிவித்துள்ளது!

இதையும் படியுங்கள்:
சீனாவில் இருந்து மீண்டும் அச்சுறுத்த வரும் வைரஸ்... தொற்றுநோயை ஏற்படுத்துமா?
Asteroid
Read Entire Article