ARTICLE AD BOX
சென்னை,
சென்னை கொளத்தூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நாம் அளவோடு பெற்றதனால்தான் நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் சூழல் ஏற்படுகிறது. மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பில் நாடாளுமன்ற தொகுதிகள் குறைகின்றன. குழந்தைகளை அதிகளவில் பெற்றுக் கொள்ள நினைத்தால், நம்மோடு யாரும் போட்டி போட முடியாது. எனினும் நீங்கள் அளவோடு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும். . தமிழகத்தில் இருமொழி கொள்கைதான். 5 ஆயிரம் கோடி அல்ல, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் மும்மொழிக்கொள்கையை ஏற்கமாட்டோம் என்றார்.
Related Tags :