ARTICLE AD BOX

புதிய தமிழகம் கட்சி சார்பாக தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டு பட்டியல் பிரிவு மக்களுக்கு வழங்கப்பட்ட 18 சதவீத இட ஒதுக்கீட்டை அனைத்து சமுதாய மக்களுக்கும் பிரித்து வழங்கினால் பட்டியல் பிரிவு மக்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள். பட்டியல் பிரிவு மக்களுக்கு உள் ஒதுக்கீடு தொடர்பாக எந்த ஒரு பாகுபாடும் காட்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்றம் தெரிவித்ததை சமூக நீதி மற்றும் திராவிடம் என சொல்லக்கூடிய திமுகவினர் கடைப்பிடித்த மாதிரி தெரியவில்லை.
எந்த அடிப்படையில் கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகின்றது என்றும் தமிழக அரசு இதனை எதிர்க்க என்ன காரணம் என்பதையும் தெளிவாக கூற வேண்டும். தமிழகத்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது. சமீபத்திய பாலியல் குற்றச்சம்பவங்கள் புதிய செய்தியாக தான் உள்ளது. தமிழகத்தில் இது போன்ற விஷயங்களை நான் கேள்விப்பட்டதே கிடையாது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மக்களுக்கு சாப்பாடு இருக்கிறதோ இல்லையோ பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். ஆனால் இன்றைய சூழலில் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.