தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் பட்ஜெட்! முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு!

1 day ago
ARTICLE AD BOX

திமுக அரசின் 2025-2026ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட், தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் பட்ஜெட் என்று, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

"1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்தாலும் வியப்பதற்கில்லை"- ப.சிதம்பரம் ட்வீட்!File Photo

சிவகங்கை மாவட்டம திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், 2025-2026ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- தமிழக அரசின் 2025-26 ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை பார்த்தேன். அதில் முதலில் பாராட்ட வேண்டியது நிதி மேலாண்மையை. தமிழ்நாடு அரசினுடைய மொத்த கடன் ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் கோடியாகும். இது தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தியில் 3 சதவீதத்திற்குள்ளாக அடங்குகிறது. 3 சதவீதத்திற்குள்ளாக நிதி பற்றாக்குறையை அடக்கியது மிகவும் பாராட்டுக்குரியது. மத்திய அரசினுடைய நிதிப் பாற்றாக்குறை 4.1 சதவீதமாகும். தமிழ்நாடு அரசினுடைய நிதி பற்றாக்குறை 3 சதவீதமாகும். அதிமுக அரசினுடைய இறுதி ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.62,326 கோடியாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் ரூ.41,635 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய வருவாய் பற்றாக்குறை ரூ.21 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளதை பாராட்டுகிறேன். மொத்தத்தில் தமிழ்நாடு அரசினுடைய நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

2025-2026ஆம் நிதியாண்டில் அரசு சார்பில் முதலீடு ரூ.57,231 கோடி. இது நடப்பு ஆண்டைவிட 22.4 சதவீதம் அதிகம். முதலீடு செலவை கடந்த ஆண்டைவிட 22.4 சதவீதம் கூட்டி இருப்பதை பாராட்டுகிறேன். எவ்வளவு முதலீடு செய்கிறோமே அந்த அளவுக்கு தான் வளர்ச்சி இருக்கிறது. தமிழ்நாடு பொருளாதாரம் 8 சதவீவத வளர்ச்சியை அடைவதாக ஆய்வறிக்கை சொல்கிறது. அதற்கு ரூ.57,231 கோடி முதலீடு செய்யப் போவதாக நிதி அமைச்சர் சொல்கிறார். அதனை பாராட்டுகிறேன். ஆனால், முதலீடுகளின் எண்ணிக்கை மட்டும் போதாது. அவற்றில் தரமும் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் ரூ.55,210 கோடி கல்விக்காக ஒதுக்கியுள்ளனர். சுகாதாரத் துறைக்கு ரூ.21,906 கோடி. நகர்ப்புற மேம்பாட்டிற்கு ரூ.34,396 கோடியும், ஊரக வளர்ச்சிக்கு ரூ.29,465 கோடியும் ஒதுக்கியுள்ளார்கள். குறு, சிறு தொழில்களை ஊக்குவிப்பதற்காக வங்கிகள் மூலமாக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் தர ஏற்பாடு செய்திருப்பதாக சொல்கிறார்கள். அந்த கடனை முறையாக தர வேண்டும். வங்கி அதிகாரிகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை அழைத்து, கடன் வழங்கப்படுகிறதா என்று நிதியமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும்.

 முக்கிய அறிவிப்புகள்

கீழடி உள்ளிட்ட இடங்களில் தொல்லியல் ஆய்விற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தொல்லியல் ஆய்வு என்பது தமிழகத்தின் பெருமையை உலகம் முழுவதும் உயர்த்தி உள்ளது. கீழடி நாகரிகம் தான் தொன்மையான நாகரிகம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை சட்டமன்றத் தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி திறப்பதாக அறிவித்துள்ளார்கள். சென்னைக்கு அருகில் 2000 ஏக்கர் பரப்பளவில் குளோபல் சிட்டி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 6வது நீர்த்தேக்கத்தை ரூ.350 கோடியில் அமைப்பதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். அண்ணா பல்கலைக்கு ரூ.600 கோடி ஒதுக்கியுள்ளனர். மொத்தத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கும் நிதிநிலை அறிக்கையை அறிவித்தற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், நிதி அமைச்சரையும் பாராட்டுகிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி – குண்டாறு திட்டம் என்பது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போட்டது வெறும் கல் மட்டும்தான். அன்றே நான் சொன்னேன் இந்த திட்டத்திற்கு 3 அணைகள் கட்ட வேண்டும், நீண்ட கால்வாய் வெட்ட வேண்டும் என்று. ஒட்டு மொத்தத்தில் 2025-26ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் என்பது தமிழக மக்களுக்கு நலன் பயக்கும் பட்ஜெட் ஆகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Read Entire Article