ARTICLE AD BOX
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
2025 - 26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.
எகிறும் எதிர்பார்ப்பு
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதனால், நிதிநிலை அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இரண்டாவது ஆண்டாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.
936 இடங்களில் நேரலை
பேரவை மண்டபத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிகழ்வானது தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த ஒளிபரப்பை தமிழகம் முழுவதும் பொது இடங்களில் காண்பதற்கு உள்ளாட்சித் துறையின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 100 இடங்களிலும், ஏனைய 24 மாநகராட்சிப் பகுதிகளில் 48 பகுதிகளிலும், 137 நகராட்சிகளில் 274, பேரூராட்சிகளில் 425 இடங்களில் எல்இடி திரையின் வாயிலாக நேரலை செய்யப்பட்டு வருகிறது.
வேளாண் நிதிநிலை: தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வேளாண் நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மாா்ச் 15) தாக்கலாக உள்ளது. இதை அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்கிறாா்.