தமன் இசையில் ‘இதயம் முரளி’ படத்தின் முதல் பாடல்..!

3 hours ago
ARTICLE AD BOX

அதர்வா நடித்துள்ள இதயம் முரளி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் கவனம் பெற்ற ஒருவராக நடிகர் அதர்வா முரளி இருந்து வருகிறார். தனது தந்தையின் பட்டப் பெயரான ‘இதயம் முரளி’ என்ற படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் கயாது லோஹர், பிரீத்தி முகுந்தன், ஏஞ்சலின், பிரக்யா நக்ரா என பலர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். அவரது இசையில் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாடலை இன்று(மர்ச் 21) மாலை 6 மணிக்கு வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று கால தாமதமாக மாலை 6.30 மணியளவில் பாடல் வெளியாகியுள்ளது.

பல்வேறு மாறுபட்ட கதைக்களங்களில் நடித்து வரும் அதர்வா 'பட்டத்து அரசன்' திரைப்படத்திற்குப் பிறகு தற்போது புதுமுக இயக்குநருடன் இணைந்ததாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

தணல் எனப் பெயரிடப்பட்ட இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்க, அன்னை ஃபிலிம் புரொடக்சன், எம். ஜான் பீட்டர்  தயாரிக்கிறார்.

Read Entire Article