ARTICLE AD BOX
தனுஷ் மீதுதான் மக்களுக்கு கோபமாம்.. வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்.. என்ன இப்படி பேசிட்டாரு?
சென்னை: தனுஷ் கடைசியாக தனது 50ஆவது படமான ராயன் படத்தை இயக்கியும், நடித்தும் முடித்தார். அந்தப் படத்தை முடித்த கையோடு சேகர் கம்முல்லா இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு குபேரா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே அவர் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கினார். சில நாட்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் தோல்வியை சந்தித்தது.
தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருப்பவர் தனுஷ். ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தேசிய விருதினையும் வென்றிருக்கும் அவர் கடைசியாக ராயன் திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்தை அவரே இயக்கியிருந்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. தோல்வியடைந்தது மட்டுமின்றி கடுமையான ட்ரோலுக்கும் அந்தப் படம் உள்ளானது. கடைசியாக தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் படம்தான் ஹிட்டாக அமைந்தது. அடுத்ததாக எதுவும் ஹிட் இல்லை.

குபேரா: அவர் இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். கண்டிப்பாக இந்தப் படத்தை மெகா ஹிட்டாக கொடுக்க வேண்டும் என்கிற முழு மூச்சில் படக்குழுவினர் உழைத்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
இயக்குநர் தனுஷ்: நடிகராக மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது உள்ளிட்ட ப்ளாட்பார்ம்களிலும் தனுஷ் ஃபுல் ஃபார்மோடுதான் இருக்கிறார். அவர் முதன்முதலாக இயக்கிய பவர் பாண்டி படத்தில் ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். வயதானவர்களுக்கு இடையே வரும் காதலை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனையடுத்து இயக்கிய ராயன் படம்தான் சறுக்கிவிட்டது.
நிறைய கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன்.. அவர் மாதிரிலாம் முடியாது.. ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: தற்போது அவர் சகோதரி மகன் பவிஷை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கினார் தனுஷ். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. அப்படத்துக்கு போட்டியாக களமிறங்கிய டிராகன் திரைப்படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. இந்நிலையில் தனுஷ் குறித்தும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் குறித்தும் ஓபனாக பேசியிருக்கிறார் தயாரிப்பாளர் கே.ராஜன்.
ரஜினிகாந்த் கடைப்பிடிக்கும் டயட் என்ன தெரியுமா?.. அட இதுதான் அந்த சீக்ரெட்டா.. செம உஷார்
ராஜனின் பேச்சு: அவர் ஒரு பட விழாவில் பேசுகையில், "ஒரு படத்தில் ஹீரோ பிராந்தி குடித்துக்கொண்டிருக்கிறார். உடனே அதை பிடுங்கி ஹீரோயினும் பிடுங்குகிறார். இதெல்லாம் என்ன கலாசாரம். இதில் அதுக்கு என்மேல் என்ன கோபம், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்று பெயரும் வைத்திருக்கிறார்கள். உன் மீதுதான் மக்கள் பயங்கர கோபமாக இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு படமா" என்றார்.