ARTICLE AD BOX

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் டிராகன். கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகி வெற்றி கண்ட பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோ ஆனார். அந்த படத்தை தானே இயக்கியும் இருந்தார். இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது இதன் மூலமாக பிரதிப் ரங்கநாதன் ஹீரோவாக உருவெடுத்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் LIK படத்திலும் ஹீரோவாக நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான டிராகன் படத்திலும் நடித்தார்.
இந்த படம் தற்போது வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதன் பார்ப்பதற்கு தனுஷ் போல இருக்கிறார். அவர் நடிக்கும் படமும் தனுஷை ஞாபகப்படுத்துகிறது என்று பலரும் கூறி வருகிறார்கள். டிராகன் பட டிரைலரில் கூட சில காட்சிகள் தனுஷை ஞாபகப்படுத்தியது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரதீப் ரங்க நாதனிடம்,” தனுஷ் போல் இருப்பது உங்களுடைய உங்களுக்கு பிளஸ்ஸா? மைனஸா? என்று பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு பதில் சொன்ன அவர், நான் தினமும் கண்ணாடியில் என்னைத்தான் பார்க்கிறேன். அதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதையடுத்து பேசிய அஸ்வத் மாரிமுத்து, “ஒவ்வொருவருக்கும் தனி அடையாளம் இருக்கிறது. அப்படி பிரதீப் அவருடைய அடையாளத்தில் இருக்கிறார் யாரோடும் யாரையும் கம்பர் செய்ய வேண்டாம்” என்று கூறியுள்ளார்.