ARTICLE AD BOX
சென்னை,
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் 'அசுரன்'. இந்த படத்தின் மூலம் மலையாள நடிகை மஞ்சுவாரியர் முதல் முறையாக தமிழ் பட உலகில் அறிமுகமானார். இதில் பசுபதி, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக 'சிறகடிக்க ஆசை' தொடரில் மீனா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கோமதி பிரியா தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இவர் தெலுங்கு சீரியலில் நடித்து வந்தார். பின்னர் தமிழ் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் 'அசுரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அதை தவறவிட்டதாகவும் கூறியுள்ளார். அதாவது, அசுரன் படத்தில் தனுஷின் இளம் வயது கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க ஆடிஷன் வைத்து என்னை தேர்வு செய்தார் இயக்குனர் வெற்றிமாறன். ஆனால் அப்போது சீரியலில் தொடர்ந்து நடித்து வந்ததால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டடேன்' என்று தெரிவித்துள்ளார்.