ARTICLE AD BOX
மே மாதம் தொடங்க இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், இப்போதே வெயில் கொளுத்துகிறது. இரண்டு நாள்களுக்கு முன்னதாக தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்தாலும், தற்போது அடிக்கும் வெயில் குறையவில்லி. அதனால், மே மாதம் நெருக்கும் போது வெயில் இன்னும் உக்கிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க நாம் முறையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் உட்கொள்வது அவசியம். தவிர, இயற்கையான இளநீர், சர்பத் போன்ற பானங்களையும் பருகி வரலாம்.
அந்த வகையில், சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க இருந்து பானம் ஒன்றை சித்த மருத்துவர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் பரிந்துரைத்து உள்ளார்.
அதாவது பழைய சாதம் நீராகாரம் தான் அது. குடல் ஆரோக்கியத்திற்கும் உதவும். வெப்பத்தை தணிக்கவும் உதவும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
அதுமட்டுமின்றி வெயில் நேரத்தில் இளநீர், மோர் போன்றவற்றையும் குடிக்கலாம். கூல்டிரிங்ஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. எனவே காலையில் தினமும் பழைய சோறை கறைத்து நீராகாரமாக எடுத்து கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.