ARTICLE AD BOX

அக்கா மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் தனுஷ் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். தனுஷ்க்கு அமைந்த காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை படங்கள் போல் காதல் ததும்பும் இந்தப் படத்தை மருமகனுக்காக தயாரித்து இயக்கியுள்ளார்.
காதலர் தினத்தில் வெளியாக இருந்த படம் பிப்ரவரி 21ம் தேதிக்கு தள்ளிப் போய் உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியுள்ள நிலையில் ட்ரெய்லரும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது வழக்கமான கதை தான். ஜாலியா வாங்க ஜாலியாப் போங்க என்று தனுஷ் ட்ரெய்லரில் கூறியுள்ளார். படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்று தெரிகிறது.
சரத்குமார், ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். பவர் பாண்டி, ராயன் படங்களை இயக்கிய தனுஷ் இயக்கத்தில் வெளிவரும் மூன்றாவது படம் இது.