ARTICLE AD BOX

பிரபல நடிகரும் நடன கலைஞருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சினது சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது . இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கு பெற்று மிகுந்த உற்சாகத்து நடன நிகழ்ச்சியை கண்டு கழித்தார்கள். அவர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக பிரபுதேவா அசத்தலாக நடனம் ஆடினார். இதில் நடிகர்கள் தனுஷ், வடிவேலு, எஸ்.ஜே சூர்யா, இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பிரபு தேவா தான் நடித்து நடன இயக்குனராக பணியாற்றிய பாடல்களுக்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ரசிகரக்ள் தங்களின் செல்போனில் டார்ச் லைட் அடித்து பிரபுதேவாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்தார்கள். இதில் வடிவேலுவும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, பிரபு தேவ இந்த நிகழ்ச்சிக்கு வர சொன்னார் என்று வந்தேன். ஆனால் வாய்க்குள்ள விரலை விட்டு ஆட்டிகிட்டு இருக்காரு. இப்படித்தான் சூட்டிங்லேயும் பண்ணுவாரு. அதற்கு ரோஜா தான் சாட்சி. உண்மையிலேயே தமிழ்நாட்டிற்கு கிடைத்த மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா” என்று கூறியுள்ளார்.