ARTICLE AD BOX

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படம் குறித்த அப்டேட் பார்ப்போம்..
தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தை தொடர்ந்து, ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ‘லப்பர் பந்து’ இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து, மாரி செல்வராஜ் இயக்கும் படம் என தொடர் பிஸியில் இருக்கிறார்.
இதற்கிடையே பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதன் ஷூட் டெல்லியில் நடந்து வருகிறது. தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் கமிட் ஆகியுள்ளார்.
முன்னதாக, தனுஷும், ஆனந்த்தும் இணைந்து ‘ராஞ்சனா’ என்கிற வெற்றிப் படத்தை கொடுத்திருப்பதால், இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், இப்படி ஹீரோயின் கீர்த்தி தெரிவிக்கையில், ‘தனுஷ் மற்றும் ஆனந்த் எல்.ராயுடன் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் பணியாற்றி வருகிறேன். டெல்லியில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் நான் அந்த ஷூட்டிங்கிற்கு வருவதற்காக, அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படம் ஒரு அழகான படம். அதில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் இதற்கு முன்பு நான் ஏற்காத ஒன்று. காதல் படங்கள்தான் எனக்கு பிடிக்கும். இதுவும் ஒரு காதல் திரைப்படம்தான். இந்தக் கதை வித்தியாசமாக தயார் செய்யப்பட்டிருக்கிறது. தனுஷுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கிறேன். அது அற்புதமான ஒன்று. அதேபோல்தான் படமும் இருக்கும். இவர்களுடன் பணியாற்றுவதில் எனக்கு மகிழ்ச்சி’ என்றார்.

The post தனுஷுடன் இணைந்து நடிப்பது அற்புதம்: பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் உற்சாகம்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.