ARTICLE AD BOX

Siragadikka Aasai: பொதுவாக நடிப்பில் ஆர்வம் இருக்கும் பிரபலங்கள் அதற்காக பல வழிகளில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கின்றனர். சிலருக்கு அந்த வழி எளிதாக திறந்துவிடுகிறது. சிலருக்கு அதுவே பல வழியில் சிக்கலையும் ஏற்படுகிறது.
தற்போது விஜய் டிவியில் பிரபல சீரியலாக இருக்கும் சிறகடிக்க ஆசை தொடரில் நாயகியாக நடித்து வருபவர் கோமதிப்பிரியா. இவர் சின்ன சின்ன வேடங்களில் தொடங்கி தற்போது ஹீரோயினாக அவதாரம் எடுத்திருக்கிறார். ரசிகர்களிடமும் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
சிறகடிக்க ஆசை சில நாட்களிலேயே மிகப்பெரிய சூப்பர் ஹிட் தொடராக மாற கோமதி பிரியா நடிக்கும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு சிறகடிக்க ஆசை மலையாளம் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இரண்டு மொழிகளிலும் பிசியாக நடித்து வந்த கோமதி பிரியா தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் திரைப்படத்தில் நடிக்க ஆடிஷனில் கலந்து கொள்கிறார். அம்மு அபிராமி நடித்த கேரக்டரில் முதலில் தேர்வானவர் கோமதி பிரியா தானாம்.
ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களில் நடித்து வந்ததால் அவருக்கு இப்படத்தில் கேட்ட நேரத்தில் சரியாக கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது. இதனால் அவருக்கு அசுரன் பட வாய்ப்பு கைநழுவி போனதாம்.
அதைத் தொடர்ந்து அந்த படத்தில் நடிக்க அம்மு அபிராமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் கோமதி பிரியா மலையாளத்தில் தன்னால் உடல்நலம் சரியில்லாத நேரத்தில் நடிக்க முடியாமல் போன காட்சிகளை தனியாக நடித்துக் கொடுப்பதாக கேட்டிருந்தும் அத்தரப்பு ஒப்புக்கொள்ளாமல் இவரை சீரியலில் இருந்து நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது தமிழில் நடித்து வரும் கோமதிப்பிரியா சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் விரைவில் சினிமாக்களிலும் கால் பதிக்க வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு தற்போது வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.