ARTICLE AD BOX

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவர் மாநாடு, வெந்து தணிந்தது காடு, 10 தல என அடுத்தடுத்த படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார் அதன்பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட்டானார். ஆனால் இன்னும் படம் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கிறது. கடைசியில் தக் லைஃப் படத்தில் கமலோடு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து சிம்புவை ரசிகர்கள் திரையில் பார்க்கப் போகிறார்கள். இந்த நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் சிம்பு குறித்து கூறுகையில்,” வெறும் அறிவிப்போடு நின்றுவிடக்கூடாது. இப்போ பாருங்க இன்னும் சூட்டிங்கிற்கே அவர் போகவில்லை.
அவர் எப்போது சூட்டிங்கிற்க்கு போவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வரலாற்றுக் கதையில் நடிக்க போகிறார் .அந்த படத்தை அவர்தான் தயாரிக்கப் போகிறார். 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கிறார் என்றால் அதை திரும்ப எடுத்து விடுவார். ஆனால் சம்பளம் அவருக்கு வராது அவ்வளவுதான். ஆனால் இத்தனை இயக்குனர்களை கமிட் செய்து வைத்திருக்கிறார்.
சிம்பு அடுத்தடுத்த படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு ஒரு விருந்தை கொடுக்க வேண்டும். ஆனால் தனுஷ் பாருங்க. ஒரு பக்கம் தன இயக்கிய படத்தின் புரொமோஷன் நடக்குது அதுக்கு கூட வரமுடியாம மறுபக்கம் ஹிந்தியில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் இட்லி கடை பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். தனுஷிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். எப்படி பிசியாக இருந்தாலும் தனுஷ் முகத்தில் எப்போதும் ஒரு சாந்தம் தான் தெரியும்” என்று கூறியுள்ளார்.