அதை நான் அன்று செய்ய தவறிவிட்டேன்: சீதாவுடன் விவாகரத்து பற்றி பார்த்திபன் உருக்கம்..

3 hours ago
ARTICLE AD BOX
parthiban and seetha good relationship life

சீதாவுடன் ஏற்பட்ட விவாகரத்து குறித்து, பார்த்திபன் மனம் நெகிழ்ந்து, மாறாத காதலுடன் மொழிந்த உணர்வியல் பார்ப்போம்..

பார்த்திபன்-சீதா இருவரும் காதலித்து திருமணம் செய்து 11 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒருமகன் உள்ளனர். இந்நிலையில், இது குறித்து உருக்கமாக பார்த்திபன் கூறியதாவது:

‘காதல் என்பது மிகவும் புனிதமானது என்று சொல்வார்கள். அந்த புனிதமான காதலை நான் உணர்ந்தது சீதாவிடம் தான்.

அந்த காதல் எப்படிப்பட்ட காதல் என்றால், நான் இப்போது எந்த காரணத்தையும் கூறி எந்த உண்மையையும் மறைக்க விரும்பவில்லை. காதலையும் , பொய்யையும் கடந்துவிட்டோம். நான் ரொம்ப சாதாரண ஆளாக இருக்கும் போது, நீ ரொம்ப பெரிய ஆளாக வருவாய், கார், பங்களான்னு வாங்குவ என்று ஒரு ஜோசியம் சொன்னது அந்த காதல் தான்.

இப்போது விவாகரத்து என்று எல்லோரும் சொல்லும்போது, அது வேண்டாம் என்று நானே புரியாமல் அதை விரட்டிட்டு இருந்தேன். விவாகரத்து எல்லாம் வேண்டாம் எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று என் மனைவியிடம் கேட்டுட்டு இருந்தேன்.

சீதா, மீண்டும் நடிக்க போறேன் என்று சொன்னபோது, நான் அவள் கூட இருந்து சப்போர்ட் பண்ணுறேன் என்று சொல்லி இருக்கனும், ஆனால், அப்போது குடும்ப சூழ்நிலை, குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று நான் வித்தியாசமாக யோசித்து விட்டேன். அதனால் தான் எங்களுக்குள் பிரிவு வந்தது, அதை நான் அன்று செய்ய தவறிவிட்டேன்.

அண்மையில் சீதாவின் தாயார் இறந்தபோது இறுதிச்சடங்குக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உடன் இருந்து நான் பார்த்தேன். மறுநாள் சீதா தனக்கு நன்றி கூறி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இன்னைக்கு வரைக்கும் இரண்டு பேருக்குமே வருத்தமே தவிர, மரியாதையும் அன்பும் அப்படியேதான் இருக்கும், அதில் எந்த மாற்றமும் இல்லை.

எங்கள் திருமணம் முறிவு பற்றி பிள்ளைகளிடம் பேசியதே கிடையாது. மூணு பேருக்கும் அம்மாவை ரொம்ப பிடிக்கும். பொதுவாக கணவன் மனைவி பிரிந்துவிட்டால், ஒருவரை ஒருவர் கெட்டவங்கன்னு சொல்லிக் கொள்வார்கள். ஆனால், நாங்கள் இருவரும் அப்படி நடந்து கொண்டதே இல்லை. கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் புரிதலும், அடுத்தவர் முன்னேற்றத்தை விரும்பும் மனப்பான்மையும் அவசியம்’ என்று பேசியுள்ளார்.

parthiban and  seetha good relationship lifeparthiban and seetha good relationship life

The post அதை நான் அன்று செய்ய தவறிவிட்டேன்: சீதாவுடன் விவாகரத்து பற்றி பார்த்திபன் உருக்கம்.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article