தனுசுக்கு இப்படி ஒரு சிக்கலா.. பணத்துக்குப் பிரச்சனை இல்ல.. மற்றபடி ரொம்ப கவனம் தேவை

20 hours ago
ARTICLE AD BOX

தனுசுக்கு இப்படி ஒரு சிக்கலா.. பணத்துக்குப் பிரச்சனை இல்ல.. மற்றபடி ரொம்ப கவனம் தேவை

Astrology
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

ஏப்ரல் மாத பலன்: ஏப்ரல் மாதத்தில் தனுசு ராசிக்காரர்கள் பெறும் நற்பலன்கள் என்ன, பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஆரம்பமாகிறது. மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அன்று முதல் மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிற காலகட்டம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தென் நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. பாதுகாப்பக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். சனி ராகுவின் சேர்க்கை பல அதிர்ச்சியான விஷயங்களையும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்தில் தனுசு ராசியினர் பெறும் நல்ல பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

Astrology Dhanusu

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு 4 ஆவது ஸ்தானத்தில் புதன், சூரியன், குரு, சனி, சுக்கிர பகவான் அருள் பாலிக்கின்றனர். ராசிக்கு 6 ஆம் இடத்தில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார். 7 ஆவது ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் இருக்கிறார். ஏப்ரல் 7 ஆம் தேதி 8 ஆம் ஸ்தானத்துக்கு பயணிக்கிறார். ராசிக்கு 10 ஆம் இடத்தில் கேது பகவான் அமர்ந்திருக்கிறார்.

இந்த மாதம் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கக் கூடிய அற்புதமான மாதமாக இருக்கும். அருகில் இருக்கும் கோவிலில் தட்சிணாமூர்த்தி மற்றும் குரு பகவானை வழிபடுவது, நவக்கிரகத்தில் உள்ள குரு பகாவனை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். குரு பகவானுக்கு உங்கள் பெயரில் வியாழக்கிழமை அர்ச்சனை செய்வது வேலைவாய்ப்பு கிடைக்கும். தடை, தாமதம், பணிப் பளு போன்ற பிரச்சனைகள் தீரும்.

நிம்மதி பெருமூச்சு விடும் காலகட்டமாக வேலை விஷயத்தில் இந்த மாதத்தில் அமையும். உடல்நலனில் அக்கறையாக இருப்பது நல்லது. போட்டிகளைச் சமாளிக்கக்கூடிய நேரமாக இருக்கும். எங்கிருந்தாலும் எதாவதொரு போட்டி இருக்கும். வரன் பார்ப்பதில் கூட போட்டி உண்டாகும். ஏதவாது ஒரு வகையில் திருமணத் தடை உண்டாகும். தன, வாக்கு, குடும்ப ஸ்தானதிபதியாக இருக்கக் கூடிய சனி பகவான் 4 ஆம் இடத்தில் இருக்கிறது.

திருமணத்தை எதிர்பார்ப்பவர்கள் பத்திரகாளியம்மன் வழிபாடு செய்தால் திருமணங்கள் கைகூடும். காமாட்சியம்மன் வழிபாடும் அருமையான பலன்களைத் தரும். வெள்ளிக்கிழமையில் திருமணம் யாருக்கு நடைபெற வேண்டுமோ அவர்கள் பெயருக்கு காமாட்சியம்மனிடம் அர்ச்சனை செய்வது நல்ல பலன்களைத் தரும்.

2 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் 4 ஆம் இடத்தில் உட்கார்ந்திருப்பதால் குடும்பத்தில் இருந்த வருமானக் குறைவுகள் அனைத்தும் நிவர்த்தியாகும். வருமானம் பெருகக்கூடிய காலகட்டமாக இருக்கும். 10, 11, 12 படிக்கும் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண் எடுப்பதற்கான வாய்ப்புள்ளது. குழப்பமான மன நிலை உங்களுக்கு இருக்கும். பாடத்தை அணுகக்கூடிய முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துகளை வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்கக் கூடிய யோகம் உண்டாகும். வீட்டுக்கு எதாவதொரு செலவுகள் செய்வீர்கள். வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அதனால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். செவ்வாய் பகவான் 7, 8 ஆம் இடத்தில் வரும்போது கவனமாக இருக்க வேண்டும். கணவருடைய உடல்நலன், சகோதரனுடைய உடல்நலனில் அக்கறையாக இருக்க வேண்டும்.

வண்டி வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செயற்கை முறை கருத்தருத்தலில் குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலையில் இருந்து திடீர் ஓய்வு பெறக்கூடிய அமைப்பு, ஆள்குறைப்பு செய்யக்கூடிய அமைப்பு, வேலையில் இருந்து நல்ல தொகையை வாங்கிவிட்டு வெளிவரக் கூடிய அமைப்பு உண்டாகும். பல்வேறு மாற்றங்களைத் தரக்கூடிய மாற்றம் உண்டாகும்.

படிக்கும் மாணவர்களுக்கு குழப்ப மனநிலை இருந்தாலும் நல்ல மதிப்பெண் எடுப்பீர்கள். உயர் கல்வி படிப்பவர்கள் படிப்பில் கவனம் தேவை. நல்ல மாதமாக இருக்கும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனை ஏற்படும். நிறைய சிந்திப்பீர்கள். வீட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. குடும்பத்தாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. வெளி உலக அக்கறையில் இருந்தால் குடும்பத்தார் உங்களை விட்டுப் பிரிந்து செல்வார்கள்.

வழிபட வேண்டிய தெய்வம் - முருகனை வழிபடுவது அனைத்து விதமான நன்மைகளையும் உங்களுக்கு கொடுக்கும்.

More From
Prev
Next
English summary
This astrology article provides detailed information about the benefits, remedies, and things to be cautious about for Dhanusu (Sagittarius) in the month of April.
Read Entire Article