பெண் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் இன்றைய கால கட்டத்தில், தனியாக சென்று ஊர் சுற்றி பார்க்க நினைக்கும் பெண் சுற்றுலா பயணிகள் பாதுப்பாக சென்று வருவதற்கு ஏற்ற தென்னிந்தியாவின் மிக முக்கியமான 10 நகரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக பெண் பயணிகள் இதை தெரிந்து வைத்துக் கொண்டால் நிம்மதியாக பயணம் செய்து விட்டு வரலாம்.

மைசூரு
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு பெண் சுற்றுலா பயணிகள் தனியாக பயணம் செய்ய ஏற்ற பாதுகாப்பான இடமாகும். மைசூரின் வளமான வரலாறு, கம்பீரமான அரண்மனைகள் மற்றும் பல்வேறு விதமான சந்தைகள் அங்கு மிகவும் பிரபலமானவை. தனியாக சென்று இந்த அழகை ரசிக்க, ஷாப்பிங் செல்ல எதற்கும் பெண்கள் பயமின்றி செல்ல ஏற்ற இடம்.
புதுச்சேரி
புதுச்சேரி ஒரு புகழ்பெற்ற கடற்கரை சுற்றுலாத் தலம் ஆகும். வண்ண மயமான தெருக்கள் பிரெஞ்சு காலனித்துவ அழகு மற்றும் அமைதியான கடற்கரைகள் வித்தியாசமான கஃபேக்கள் ஆகியவற்றை பெண்கள் தனியாக சென்றும் அனுபவித்து ரசிக்கலாம். பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வை தரும் தென்னிந்திய நகரங்களில் இதுவும் ஒன்று.

ஹம்பி
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி வரலாற்று ஆர்வலர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு மிகச்சிறந்த இடமாகும். இங்குள்ள பிரம்மிக்க வைக்கும் பழமையான கட்டிடங்கள், வரலாற்று சின்னங்கள் போன்றவை அனைவரையும் கவரக் கூடியவையாகும். யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான ஹம்பி பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும்.
மூணாறு
கேரளாவில் உள்ள மூணாறு அமைதியான பயணத்திற்கு ஏற்றது. இங்குள்ள தேயிலை தோட்டங்கள், மூடுபனி நிறைந்த மலைகள் மற்றும் அழகான நீர்வீழ்ச்சிகள் தனியாக சுற்றுலா சென்று அனுபவிக்க நினைக்கும் பெண்களுக்கு ஏற்ற ஓர் இடம் ஆகும்.
வர்க்கலா
கேரளாவில் உள்ள வர்க்கலா ஒரு கடற்கரை நகரமாகும். இங்கு ஓய்வெடுப்பதற்கும், யோகா மற்றும் சூரிய அஸ்தமனத்தை கண்டுகளிக்கும் சிறந்த இடமாகும். தனியாக பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு ஏற்ற இடம் ஆக இது உள்ளது.
கூர்க்
கர்நாடகாவில் உள்ள கூர்க் ஒரு இயற்கையின் வரப்பிரசாதமாக உள்ளது. கூர்கின் காபி தோட்டங்களும், பசுமையான நீர்வீழ்ச்சிகளும் மிகவும் பிரபலமானவை. இயற்கையை விரும்பும் பெண் பயணிகளுக்கு தனியாக சென்று வர இது ஒரு அமைதியான இடம்.
மகாபலிபுரம்
தமிழ்நாட்டில் உள்ள மகாபலிபுரம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கடற்கரை நகரமாகும். இங்குள்ள பாறை கோயில்களும், பிரம்மிக்க வைக்கும் கடற்கரைகளும் வரலாற்று சிறப்புமிக்க கட்டிட கலைகளும் அமைதியை நாடிச் செல்லும் பெண் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாகும். பெண்கள் பாதுகாப்பாக சென்று வர ஏற்ற இடமாகும்.
ஆலப்புழா
கேரளாவில் உள்ள ஆலப்புழா ஹவுஸ் படகு பயணங்கள் மற்றும் ஹோம் ஸ்டேக்களுக்கு மிகவும் பிரபலமானவை. தனியாக பயணம் செய்து ஆலப்புழாவின் அமைதியான அழகை ரசிக்கலாம்.
கன்னியாகுமரி
தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி இந்தியாவின் தென் முனையாகும். புகழ்பெற்ற விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம், 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் அழகான படகு சவாரியையும் அனுபவிக்கலாம்.இங்கு காலை வேளையில் ரம்மியமான சூரிய உதயத்தை காண்பது மனதிற்கு உற்சாகத்தை தரக்கூடியது.
கோகர்ணா: கர்நாடக மாநிலத்தில் உள்ள கோகர்ணா யோகா மற்றும் அமைதியான ஓய்வு நேரங்களுக்கு ஏற்ற அழகிய கடற்கரைகளையும், அமைதியான சூழலையும் அனுபவிக்க ஏற்ற இடம் ஆகும். இங்கு பெண் பயணிகள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பாதுகாப்பாக தங்கி ஓய்வெடுக்கலாம்.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet