தங்கம், வெள்ளிக்கு பதில் பிளாட்டினம் வாங்கலாமா? மறு விற்பனைக்கு லாபம் கிடைக்குமா?

3 hours ago
ARTICLE AD BOX
  செய்திகள்

தங்கம், வெள்ளிக்கு பதில் பிளாட்டினம் வாங்கலாமா? மறு விற்பனைக்கு லாபம் கிடைக்குமா?

News

முதலீடு என்று வரும்போது தங்கம் மற்றும் வெள்ளியை அதிக அளவில் தேர்ந்தெடுக்கும் மக்கள்.. ஏன் பிளாட்டினத்தை தேர்ந்தெடுப்பதில்லை என்று யோசித்திருக்கிறீர்களா? முன்பு ஒரு காலத்தில் தங்கத்தை விட விலை உயர்ந்த உலோகமாக பிளாட்டினம் இருந்தது. ஆனால் தங்கம் கடந்து வந்த பாதையை பார்த்தால் தங்கத்தின் விலை மட்டும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கையில்.. பிளாட்டினம் அதே விலையில் அப்படியே நிலையாக இருந்து வருகிறது. பிளாட்டினம் ஏன் அந்தளவுக்கு பிரபலமாகவில்லை?, அது வாங்குவதற்கு தகுதியான உலோகம் இல்லையா?. இதன் மறு விற்பனை மதிப்பு என்ன? போன்ற கேள்விகளுக்கு இந்த பதிவில் விடையை பார்ப்போம்.

தங்கத்தை விடவும் பிளாட்டினம் தான் விலை அதிகம் என்ற ஒரு நிலை இதற்கு முன்னர் இருந்தது. ஏன் இப்போதும் சிலர் தங்கத்தை விட பிளாட்டினம் விலை அதிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அப்படி இல்லை! இன்றைய நிலவரப்படி 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 8,230 ரூபாயாக உள்ளது. ஆனால் 1 கிராம் பிளாட்டினத்தின் விலை 2,779 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம், வெள்ளிக்கு பதில் பிளாட்டினம் வாங்கலாமா? மறு விற்பனைக்கு லாபம் கிடைக்குமா?

முன்பு ஒரு காலத்தில் தங்கத்தை விடவும் விலை அதிகமாக விற்கப்பட்ட காரணத்தினால் சாமானியர்களுக்கு பிளாட்டினம் வாங்குவது எட்டா கனியாக இருந்தது. இதனால் தலைமுறை தலைமுறையாக தங்கம் மற்றும் வெள்ளியை தான் வாங்கி வந்தனர்.. பயன்படுத்தி வந்தனர்! இதனால் பிளாட்டினத்தோடு ஒப்பிடுகையில் தங்கம் மற்றும் வெள்ளி முதலீடு அதிக அளவு இருந்தது.

Also Read
பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000! பட்ஜெட்டில் வெளியான தரமான அறிவிப்பு!
பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000! பட்ஜெட்டில் வெளியான தரமான அறிவிப்பு!

இந்தக் காரணத்தினால் பிளாட்டினத்தின் பயன்பாடு மற்றும் நன்மைகள் பற்றி பலருக்கும் முழுமையாக தெரியவில்லை. தங்கம் மற்றும் வெள்ளியை பார்த்தால் பலவிதமான டிசைன்களை வாங்கலாம். ஆன்டிக் ஜுவல்லரி, கேட்கும் பெயர்களை கொண்டு ஜுவல்லரி எனதங்களுக்கு விருப்பமான டிசைனை பெறலாம்.

ஆனால் பிளாட்டினம் ஜுவல்லரியில் வடிவமைப்புகள் குறைவு. இன்னமும் நீங்கள் நகை கடைகளில் சென்று பார்த்தல் தெரியும்.. தங்கம் வெள்ளிக்கென்று பெரிய செக்ஷனே வைத்திருக்கும் நகைக்கடைக்காரர்கள்.. பிளாட்டினம் நகை வாங்க வேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு செக்சனை மட்டும்தான் வைத்திருப்பார்கள்.

மறு விற்பனை: எந்த ஒரு முதலீடானாலும் அதற்கு லாபம் என்ற ஒன்று இருக்க வேண்டும் என்பதுதான் முதலீடாளர்களின் ஆசை. தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு சில காலமாக மகிழ்ச்சி அளிக்கும் விதமாக லாபம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏனெனில் தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்றத்தை கண்டு கொண்டே செல்கிறது. ஆனால் பிளாட்டினம் நிலையாக அப்படியே இருப்பதால் இதனால் எதிர்காலத்தில் லாபம் வருமா என்ற ஒரு கேள்வி எழுகிறது.

அதோடு மறு விற்பனை என்று வரும்போது எல்லா நகை கடைக்காரர்களும் பிளாட்டினம் நகைகளை வாங்குவதில்லை. அதுவே தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாரம்பரிய நகைகளாக இருந்தால் உடனடியாக அவற்றை நீங்கள் மறு விற்பனை செய்யலாம். இதுவும் பிளாட்டினத்தை மக்கள் தேர்ந்தெடுக்காததற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

பிளாட்டினம் தங்கத்தை விடவும் அரிதான உலோகமாகும். தொழில் துறையில் பிளாட்டினதிற்கான தேவை அதிக அளவில் உள்ளது. அதோடு அலர்ஜி ரியாக்ஷனை ஏற்படுத்தாத உலோகங்களில் பிளாட்டினமும் ஒன்று. சிலருக்கு தங்க நகையே சருமத்திற்கு செட் ஆகாது. அப்படி இருப்பவர்கள் பிளாட்டினத்தை பயன்படுத்துவார்கள். நீங்கள் பிளாட்டினத்தில் முதலீடு செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவெடுப்பதற்கு முன்பு ஒரு சில விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

தங்கம் மற்றும் வெள்ளி கடந்து வந்த பாதையை பார்க்கும் போது பிளாட்டினம் சற்று குறைவாகத்தான் லாபத்தை வழங்கி உள்ளது. ஒருவேளை இனிவரும் காலங்களில் பிளாட்டினத்தின் மதிப்பு உயரவும் வாய்ப்புள்ளது. சந்தை நிலவரத்தை பொறுத்துதான் இதையும் நம்மால் கூற முடியும். ஆனால் தற்போதைய நிலவரப்படி நீண்ட கால முதலீடாக இருந்தால் நீங்கள் பிளாட்டினத்தை கருத்தில் கொள்ளலாம். அதுவே குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற விரும்பினால் தங்கம் மற்றும் வெள்ளி தான் சிறந்த தேர்வாக இருக்கும்.

Read Entire Article