ARTICLE AD BOX
சென்னை: தங்கம் விலை நேற்று திடீரென பவுனுக்கு ரூ.320 குறைந்தது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடனேயே இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்து 480க்கு விற்பனையானது. இது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.8,270க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்து 160க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.112க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000க்கும் விற்பனையானது.
The post தங்கம் விலையில் மாற்றம்: பவுனுக்கு ரூ.320 குறைந்தது appeared first on Dinakaran.