ARTICLE AD BOX
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. இன்று அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் முதல் முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 65,000-ஐ கடந்த நிலையில், வார இறுதி நாளான சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 65,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று(திங்கள்கிழமை) ஒரு சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 65,680-க்கு வர்த்தகமானது.
இதையும் படிக்க : இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: காஸாவில் 100 பேர் பலி
செவ்வாய்க்கிழமை இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 66,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 40 உயர்ந்து, ரூ. 8,250-க்கு விற்பனை ஆகிறது.
தங்கத்தின் விலை வரலாற்றில் முதல்முறையாக ரூ. 66,000-ஐ தொட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல், வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 113-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,13,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.