Sunita Williams: 9 மாதங்களுக்கு பிறகு.. சுனிதா வில்லியம்ஸ் பூமியில் முதலில் காலடி எடுத்து வைக்க போகும் இடம் இதுதான்!

18 hours ago
ARTICLE AD BOX

Sunita Williams: 9 மாதங்களுக்கு பிறகு.. சுனிதா வில்லியம்ஸ் பூமியில் முதலில் காலடி எடுத்து வைக்க போகும் இடம் இதுதான்!

Washington
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: சுமார் 9 மாத விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு சுனிதா வில்லியம்ஸ் இப்போது பூமிக்குத் திரும்பிக் கொண்டு இருக்கிறார். அவர் வந்து கொண்டிருக்கும் டிராகன் விண்கலம் நாளை காலை 3.30 மணியளவில் பூமியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அவர்கள் எங்கே தரையிறங்குவார்கள்..அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த ஜூலை மாதம் விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் நீண்ட தாமத்திற்குப் பிறகு இப்போது பூமிக்குத் திரும்புகிறார். இத்தனை காலம் அவரும் விண்வெளி வீரரான வில்மோரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலேயே தங்கி தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.

Sunita Williams Return to Earth Where Will the NASA Astronaut Make Touchdown

சர்வதேச விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான மாற்றுக் குழுவை நாசா கடந்த வெள்ளிக்கிழமை ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது. அந்த ராக்கெட் நேற்றைய தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. பூமியில் இருந்து சென்ற விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குள் சென்றனர். அங்கு அவர்கள் வழக்கமான ஆய்வுப் பணிகளை ஆரம்பித்தனர். இதையடுத்து இன்று காலை அதே ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் காப்ஸ்யூலில் சுனிதா வில்லியம்ஸும் அவரது குழுவினரும் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

எத்தனை மணிக்கு?

விண்வெளிக்குச் சென்ற டிராகன் காப்ஸ்யூல் சர்வதேச விண்வெளி நிலையத்தோடு இணைக்கப்பட்டு இருந்தது. அது அமெரிக்க நேரப்படி திங்கள் மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து பூமியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. அதி வேகத்தில் பயணிக்கும் டிராகன் காப்ஸ்யூல் 21:57 GMTக்கு பூமியில் தரையிறங்கும். அதாவது இந்திய நேரப்படி நாளை புதன்கிழமை காலை 3.27க்கு அது பூமி திரும்பும் எனத் தெரிகிறது.

28,000 km/h வேகம்..
28,000 km/h வேகம்.. "டிராகன்" உள்ளே சுனிதா வில்லியம்ஸ்! மின்னல் வேகத்தில் பூமிக்கு திரும்புகிறார்!

எங்கே இறங்குவார்கள்?

அதிவேகத்தில் பூமிக்கு வரும் விண்கலம், தரையை நெருங்கும் போது பாதுகாப்புக்காக பாராசூட் விரிவடையும். இதன் மூலம் அவர்களின் வேகம் கணிசமாகக் குறையும். அவர்களின் காப்ஸ்யூல் அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் கடல் நீரில் விழுவது போல திட்டமிடப்பட்டுள்ளது. கடல் நீரில் விழுந்த உடனேயே சுனிதா வில்லியம்ஸும் அவரது டீம் உறுப்பினர்களும் டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள்.

அங்கு வைத்துத் தான் அவர்களின் உடலுக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படும். மேலும், விண்வெளி பயணம் குறித்த மதிப்பீடுகளும் செய்யப்படும். இத்தனை நாட்கள் அவர்கள் விண்வெளியில் புவி ஈர்ப்பு இல்லாத இடத்திலேயே இருந்து பழக்கப்பட்டு விட்டனர். திடீரென பூமிக்கு திரும்புவதால் அவர்களால் பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப உடனே அட்ஜெஸ்ட் ஆக முடியாது. எனவே, அதற்கும் தேவையான டைம் அவர்களுக்கு வழங்கப்படும்.

நேரலையில் எங்குப் பார்க்கலாம்

சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்க்கும் நிகழ்வாக இது மாறியுள்ளது. நாசா தனது அனைத்து மிஷன்களை போல இதையும் நேரடியாக ஒளிபரப்புகிறது. அவர்கள் பூமிக்கு திரும்புவதையும் புளோரிடா கடற்கரை கடலில் இறங்குவதையும் நாசாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பார்க்க முடியும்.

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸின்.. சொத்து மதிப்பு எவ்வளவு! நாசா அவருக்கு தரும் சலுகைகள் என்ன
பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸின்.. சொத்து மதிப்பு எவ்வளவு! நாசா அவருக்கு தரும் சலுகைகள் என்ன

பல மாதங்கள் கூட ஆகும்

இத்தனை நாட்கள் விண்வெளியில் இருந்ததால் பூமிக்குத் திரும்பியதும் இங்குள்ள சூழலுக்கு ஏற்ப டக்கென மாற முடியாது. குறிப்பாக அவர்களின் கால்களில் தசைச் சிதைவை ஏற்பட்டு இருக்கும். இதை ஆங்கிலத்தில் Baby feet என்பார்கள். இதனால் அவர்களால் பூமியில் வழக்கம் போல நடக்கவே முடியாது. கால் அடி எடுத்து வைத்தாலே அதீத வலி ஏற்படும். முழுமையாக நார்மல் ஆகி நடக்க சில வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.

More From
Prev
Next
English summary
Find out where NASA astronaut Sunita Williams will make her historic touchdown on Earth after her extended stay on the International Space Station (சுனிதா வில்லியம்ஸ் பூமியில் தரையிறங்கும் இடம் எது): All things to know about Sunita Williams touch down.
Read Entire Article