ARTICLE AD BOX
தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதனால் தங்கத்தின் பெயரைச் சொன்னாலே மக்கள் பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது.

தங்கத்தையும், இந்தியர்களையும் பிரிக்க முடியாது. வீட்டில் தங்கம் இருந்தால் ஒரு நம்பிக்கை என்று நினைப்பவர்கள் பலர். அதனால் அலுவலகத்தில் போனஸ் வந்தாலும், வேறு எந்த ரூபத்தில் பணம் கிடைத்தாலும் கொஞ்சம் தங்கம் வாங்கிப் போடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். அதனால் தங்கத்துக்கு இவ்வளவு டிமாண்ட் இருக்கிறது. தற்போது தங்கத்தின் விலை அதிகமாக உயர்ந்து வருகிறது. இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 90 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஆனால் ரூ. 1 லட்சத்தை எட்டும் என்று செய்திகள் வந்த நிலையில் தற்போது தங்கத்தின் விலையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் (31.10) கிராம் 3023 டாலர்களாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த விலை 3050 டாலர்களாக இருந்தது. ஆனால் டாலருடன் ஒப்பிடும்போது ரூபாய் மதிப்பு உயர்ந்து வருவதால் தங்கத்தின் விலை சற்று அமைதியாகி வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை படிப்படியாக ரூ. 400 வரை குறைந்து வந்துள்ளது.

ஆனாலும் இன்னும் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 90 ஆயிரம் கீழ் வரவில்லை. தற்போது 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 90,210 ஆக உள்ளது. தங்கத்தின் விலை விரைவில் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை நிலையாக வைத்திருப்பதோடு ரஷ்யா உக்ரைன் போர் அமைதி அடைவது போன்ற காரணிகள் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. சிட்டி வங்கியின் கணிப்புப்படி 2025 ஆம் ஆண்டின் இறுதியில் தங்கத்தின் விலை 3500 டாலர்கள் ஒரு அவுன்ஸ் ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

ரஷ்யா, உக்ரைன் இடையே போர்ச் சூழல் குறைந்து வருவது, டிரம்ப் இந்த திசையில் அடி எடுத்து வைப்பது போன்ற காரணங்களால் உலகச் சந்தையில் தாக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்ததால் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதன் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்தது. தற்போது ரஷ்யா, உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் போர் முடிவுக்கு வரும் வாய்ப்புகள் தென்படுகின்றன. இதனால் பங்குச் சந்தைகள் உயர்ந்து வருகின்றன. தங்கத்தின் விலை குறைந்து வருவது இதற்கு சான்று என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு கணிப்பின்படி வரும் நாட்களில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2800 டாலர்களாக குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த கணக்கின்படி தங்கத்தின் விலை ரூ. 16 ஆயிரம் குறைய வாய்ப்புள்ளதாக கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த 6 நாட்களில் 22 கேரட் தங்கம் ரூ.200 வரை அதிகரித்துள்ளது. 24 கேரட் 10 ஆயிரத்தை நெருங்க உள்ளது. இவ்வளவு சீக்கிரமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் - ஆர்பிஐ அதிரடி