தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்!

6 hours ago
ARTICLE AD BOX

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.64,160-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ. 560 உயா்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.55 உயா்ந்து ரூ.8,065-க்கும் பவுனுக்கு ரூ.440 உயா்ந்து ரூ. 64,520-க்கும் விற்பனையானது.

செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் சோதனை

இந்த நிலையில், ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 360 குறைந்து ரூ.64,160-க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8,020-க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாள்களில் பவுனுக்கு ரூ.1000 உயர்ந்த நிலையில், இன்று அதிரடியாக பவுனுக்கு ரூ.360 குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.108-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,08,000-க்கும் விற்பனையாகிறது.

Read Entire Article