ARTICLE AD BOX
ரூ.1000 இருந்தாலே போதும்.. இந்தியர்கள் இந்த நாட்டுக்கு சுற்றுலா போகலாம்!!
டெல்லி: வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என எண்ணுபவர்கள் இந்திய ரூபாயின் மதிப்பு எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கே சென்றால் தான் தாராளமாக செலவு செய்து சுற்றி பார்க்க முடியும் என சுற்றுலாத் துறை சார்ந்தவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். அந்த வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் ஒரு நாடு அமெரிக்க டாலரையே தடை செய்திருக்கும் ஒரு நாடு குறித்து தான் இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ள போகிறோம்.
ஈரானுக்கும் இந்தியாவிற்கும் இடையே வரலாற்று ரீதியிலாகவே பல்வேறு தொடர்புகள் இருக்கின்றன. ஈரான் உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர். ஆனால் அமெரிக்க பொருளாதார தடைகளால் ஈரான் பொருளாதார ரீதியாக சரிவடைந்து இருக்கிறது. இங்கே அமெரிக்க டாலர் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது, அதே வேளையில் இந்திய ரூபாய் பல மடங்கு மதிப்பு கொண்டதாக இருக்கிறது.

இந்தியர்கள் பட்ஜெட் விலையில் சிறப்பாக சுற்றுலா சென்று வர வேண்டும் என விரும்பினால் ஈரானுக்கு சென்று வரலாம். அதாவது நம்முடைய 1 ரூபாயின் மதிப்பு ஈரான் நாட்டு நாணயத்தில் 481 யூனிட்களாக இருக்கிறது. எனவே 1000 ரூபாய் இருந்தாலே போதும் ஒரு நாள் சுற்றுலாவை மேற்கொள்ள முடியும் என சொல்லப்படுகிறது.
பயணம் ,தங்குமிடம், உணவு, ஷாப்பிங் என இவை அனைத்தையும் ஆயிரம் ரூபாயிலேயே முடித்துக் கொள்ளலாம். ஈரானில் அதிகாரப்பூர்வமாக ரியால் கரன்சியாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் இது மிகவும் வலுவான ஒரு நாணயமாக இருந்தது. தற்போதைக்கு இந்தியாவின் ஒரு ரூபாய் என்பது ஈரானின் 481 ரியால்களுக்கு சமம். எனவே 10,000 ரூபாய் இருந்தாலே ஒரு வார காலம் ஈரானில் ஆடம்பரமாக தங்கி விட்டு நாம் வர முடியும் என .
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட 2000 லிருந்து 4000 ரூபாய்க்கு உள்ளாகவே அறைகள் கிடைத்து விடுமாம். உள்ளூரில் போக்குவரத்துக்காக நாம் பயன்படுத்தக்கூடிய வாடகை கார்களுக்கு 200 ரூபாய்க்குள் தான் ஆகும் என சொல்லப்படுகிறது. ஆனால் ஈரானுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக அமெரிக்க டாலரை கொண்டு செல்லக்கூடாது.
ஏனெனில் ஈரானில் அமெரிக்க டாலர் தடை செய்யப்பட்டுள்ளது. இது தவிர அமெரிக்க டாலர் வைத்திருந்தால் அவர்களுக்கு சட்ட ரீதியான சிக்கல்களும் சிறைவாசம் கூட கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இந்தியர்கள் ஈரான் செல்லும்போது இந்திய ரூபாயை ஈரானின் ரியால்களாக மாற்றிக் கொண்டு செல்ல வேண்டும்.
அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் காரணமாக ஈரானின் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி போயிருக்கின்றன. அங்கே பண வீக்க விகிதம் 42 சதவீதமாக இருக்கிறது, வேலை வாய்ப்பின்மை பல மடங்கு உயர்ந்திருக்கிறது .50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமைக்கோட்டில் வாழ்கின்றனர்.
சுற்றுலா அடிப்படையில் பார்த்தால் கண்களுக்கு விருந்தளிக்கக்கூடிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு இடங்களை கொண்டதாக ஈரான் இருக்கிறது. எனவே இந்தியர்கள் குறைந்த செலவில் ஒரு நிறைவான சுற்றுலா சென்று வர வேண்டும் என விரும்பினால் ஈரானை தேர்வு செய்யலாம் . இருந்தாலும் ஈரான் செல்வதற்கு முன்பாக அங்கு இருக்கக்கூடிய அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழல்களை கருத்தில் கொண்டு பயணத்தை திட்டமிட வேண்டும் என்ற அறிவுரையும் வழங்கப்படுகிறது.
Story Written: Devika