ARTICLE AD BOX
தவெகவின் தலைவர் விஜய்யா அல்லது பிரசாந்த் கிஷோரா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. எங்கே என்ன நடக்கிறது என்று விவரம் தெரியாமல் விஜய் இருக்கிறார் அவரால் கட்சி தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது தொடர்ந்து நடக்குமா என்பது தெரியவில்லை நாஞ்சில் சம்பத் ராமநாதபுரத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ராமநாதபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளை குறித்து கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
பொதுக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நாஞ்சில் சம்பத் கூறுகையில், விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு ஒரு விளையாட்டு துறையை விளையாட்டு போல கருதிக் கொண்டிருந்த அரசியல் சூழலில் விளையாட்டு துறையும் இயங்க வேண்டியவர் கையில் இருந்தால்அதற்கும் உயிர் இருக்கும் என்பதை உதயநிதி நிருப்பித்துள்ளார்.
அண்ணாமலை ஒரு அரைவேக்காடு. ஐபிஎஸ் படித்த பட்டதாரி தானா எனக்கு சில நேரங்களில் சந்தேகம் வரும். இந்திய துணை கண்ட வரலாற்றில் 12 துறைகளில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது திமுக ஆட்சியில் தான். இந்த அபரா சாதனையையால் திமுகவிற்கு கிடைத்திருக்கிற வெளிச்சத்தை பார்க்க முடியாமல் அண்ணாமலையின் கண்கள் கூசுகிறது. அவர் கண்கள் குருடானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இது மன்னர் ஆட்சி அல்ல வின்னர் ஆட்சி. தவெகவின் தலைவர் விஜய்யா இல்லை பிரசாந்த் கிஷோரா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது. எங்கே என்ன நடக்கிறது என்று விவரம் தெரியாமல் விஜய் இருக்கிறார் அவரால் கட்சி தொடங்கிய இடத்திலேயே நிற்கிறது தொடர்ந்து நடக்குமா என்பது தெரியவில்லை என்றார்.