ARTICLE AD BOX

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார். எக்ஸ், முகநூல் போன்ற அம்சங்களை கொண்ட ‘ட்ரூத் சோஷியல்’ மீடியாவை அமெரிக்க மக்கள் அதிகமானோர் விரும்பி பயன்படுத்தி வருகிறார்கள். அதைப்போல, வேறு நாட்டை சேர்ந்தவர்களும் ட்ரம்ப் உடன் நெருங்கி நட்பில் இருக்கும் அரசியல் தலைவர்களும் இந்த சமூக ஊடகத்தில் இணைந்து வருகிறார்கள். அப்படி தான் இந்திய பிரதமர் மோடியும் ‘ட்ரூத் சோஷியல்’ இணைந்த முக்கிய உலகத் தலைவர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
இதில் இணைந்தவுடன் பிரதமர் மோடி திங்கட்கிழமை, தனது முதல் பதிவில், 2019ஆம் ஆண்டு ஹூஸ்டனில் ட்ரம்ப் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, நான் இந்த புதிய தளத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகின்றதாக கூறினார். அவர் இணைந்த சில நாட்களில் அவரை பின்தொடர்போரின் எண்ணிக்கை 25-ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இணைந்த காரணம் என்ன?
ட்ரூத் சோஷியல் தற்போது அமெரிக்காவில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இந்தியா போன்ற பெரிய மக்கள்தொகை கொண்ட நாடுகளுக்கு இதனை அறிமுகம் செய்து அவர்களையும் பயன்படுத்தினால் நம்மளுடைய இந்த ட்ரூத் சோஷியல் இன்னும் விரிவடையும் என்ற நோக்கத்தோடு டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டு பேசி பிரதமர் மோடியை இணையவைத்திருக்கலாம் என கூறப்படுகிறது. மோடியை போன்ற ஒருவர் இந்த சமூக வலைத்தளத்தில் இணைந்தால் விளம்பரமாக இருக்கும் என்பதால் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ட்ரூத் சோஷியல்– லாபத்திலா நஷ்டத்திலா?
ட்ரூத் சோஷியல் நிறுவனம் கடந்த 2024-ஆம் ஆண்டு $400 மில்லியன் (ரூ3,308 கோடி) நஷ்டம் அடைந்துள்ளது. அதன் வருவாய் வெறும் $3.6 மில்லியன் (ரூ.30 கோடி) மட்டுமே. இந்த அளவுக்கு நஷ்டம் சந்திக்க காரணம் செலவுகள் அதிகமானது தான். இருப்பினும், பங்குச் சந்தையில் மவுசு குறைந்தபாடு இல்லை. ஏனென்றால், பங்குசந்தையில் $4.45 பில்லியன் (ரூ.36,790 கோடி) என உயர்ந்துள்ளது, இது ட்ரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சி மீதான நம்பிக்கையால் ஏற்பட்ட எதிர்பார்ப்பு (hype) காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் வருவாய் குறைவாகவே இருப்பதால் நிறுவனம் நஷ்டத்தில் தான் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.