டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் நண்பரா அல்லது எதிரியா?. ஜெய்சங்கர் கூறிய பதில் என்ன?.

3 hours ago
ARTICLE AD BOX

Jaishankar: டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் நண்பரா அல்லது எதிரியா என்ற கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவர் ஒரு அமெரிக்க தேசியவாதி என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் (டியூ) ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் நண்பரா அல்லது எதிரியா என்ற கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், ‘சமீபத்தில் நான் அவரது (ட்ரம்பின்) பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன், நாங்கள் நன்றாக நடத்தப்பட்டோம். அவர் ஒரு அமெரிக்க தேசியவாதி என்று நான் நம்புகிறேன். டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகள் உலகளாவிய விவகாரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும் என்பதை ஒப்புக்கொண்ட அவர், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தேசிய நலன்களால் தொடர்ந்து வழிநடத்தப்படும் என்று வலியுறுத்தினார்.

டிரம்ப் பல விஷயங்களை மாற்றுவார், சில விஷயங்கள் எதிர்பார்த்தபடி இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாட்டின் நலனுக்காக வெளியுறவுக் கொள்கைகளின் அடிப்படையில் நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும்’ என்றார். ‘நாங்கள் உடன்படாத சில சிக்கல்கள் இருக்கலாம், அதே நேரம் நமக்கு சாதகமான பல விஷியங்களும் உள்ளன. அமெரிக்காவுடனான நமது உறவு வலுவானது, பிரதமர் மோடிக்கும் டிரம்புக்கும் இடையே தனிபட்ட முறையில் நல்ல நட்புறவு உள்ளது என்று கூறினார்.

Readmore: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!. 16 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம்!.

The post டொனால்ட் டிரம்ப் இந்தியாவின் நண்பரா அல்லது எதிரியா?. ஜெய்சங்கர் கூறிய பதில் என்ன?. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article