ARTICLE AD BOX
Published : 31 Jan 2025 06:45 AM
Last Updated : 31 Jan 2025 06:45 AM
அடையாறில் நவீன வசதிகளுடன் மாதிரி சார்பதிவாளர் அலுவலகம்: மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
<?php // } ?>சென்னை: அடையாறில் நவீன வசதிகளுடன் மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் நேற்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. அடையாறு சார்பதிவகம் கடந்த 1982ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு இயங்கி வருகிறது. கடந்த 2023-24 நிதியாண்டில் மொத்தம் 4955 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் ரூ.295.53 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்நிதியாண்டில் இதுவரை 3680 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் ரூ.190.57 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பதிவுத்துறை 585 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் தினந்தோறும் சராசரியாக 15,000 பொதுமக்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் எளிய பத்திரபதிவு சேவைகளை வழங்கி அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் தொடர்ந்து முதன்மை துறையாக விளங்கிவருகிறது . அதனை ஊக்குவிக்கவும் காலத்துக்கு ஏற்றவாறு பதிவுத்துறையின் தொழில்நுட்ப மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக நேற்று திருவான்மியூர், L.B.ரோடு,, காமராஜ் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியகட்டடத்தில் முதல்முறையாக நவீன வசதிகளுடன் கூடிய மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் (அடையார் சார்பதிவாளர் அலுவலகம்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த சார்பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் பி.மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த அலுவலகத்தில் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள், தேவையான இருக்கை வசதிகள், வைஃபை ( WiFi) இணைய வசதிகள், மொபைல் சார்ஜிங் யூனிட், நூலக வசதி, தூய்மையான குடிநீர் வசதி , மாற்றுதிறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான பிரத்யேக வசதிகள், தூய்மையான கழிவறைகள், மின்தூக்கி , வாகனம் நிறுத்துமிடங்கள், மின்னணு நுழைவு அட்டை அடிப்படையில் பதிவு அறையில் ஆவணதாரர்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் அதிகபட்சம் 10 நபர்கள் மட்டும் அனுமதிக்கப்படும் வகையில் நுழைவு வசதி , நவீனவசதிகளுடன் கூடிய பணி அறைகள் ( Work Stations) உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், தென்சென்னை எம்பி, தமிழச்சி தங்கபாண்டியன்,எம்எல்ஏக்கள் அசன் மவுலானா , அரவிந்த் ரமேஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- திட்டங்கள் செயல்படுத்தலில் தெற்கு ரயில்வே முன்னிலை: ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல்
- அண்ணா 56-வது நினைவு நாள்: பிப்.3-ல் திமுக அமைதிப் பேரணி
- தமிழக வேளாண் துறைக்கு கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் அதிகாரி: முதல்வருக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்
- பட்ஜெட் கூட்டத் தொடரில் சிறிய கட்சிகள் பேச கூடுதல் நேரம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்