குளு குளு காலநிலையை அனுபவிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

3 hours ago
ARTICLE AD BOX

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்து உறைப்பனி பொழிவு இருந்து வருகிறது. இதனால் அதிகாலை நேரங்களில் ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானம், குதிரை பந்தய மைதானம், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் புல்வெளிகளில் உறைப்பனி கொட்டி கிடக்கிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இதனிடையே ஊட்டியில் நிலவும் குளுகுளு காலநிலையை கொண்டாட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களான தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா போன்றவற்றிலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை காணமுடிகிறது. மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணிக்கவும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பழங்குடியின கிராமங்களுக்கும் சென்று வருகின்றனர். இதுதவிர ஊட்டியில் முதன்முதலாக அமைக்கப்பட்ட புனித ஸ்டீபன் தேவாலயம், தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா சிகரம், ஊட்டி நகரம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். சைக்கிள்கள் மூலம் நகரில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வதுடன் குன்னூர் பைக்காரா உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.

உள்ளூர் சுற்றுலா வழிகாட்டிகள் உதவியுடன் ஊட்டியின் முக்கிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு மகிழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கூறுகையில், எங்கள் நாட்டில் இருப்பதை போன்ற குளுகுளு காலநிலை நிலவுகிறது. ஊட்டி இயற்கை சூழலுடன் அழகாக இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்கா ரசிக்கும் படி உள்ளது, என்றனர்.

The post குளு குளு காலநிலையை அனுபவிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article