ARTICLE AD BOX
Donald Trump Warning Tesla Vandals Could Serve 20 Years In Jail" டெஸ்லா கார்களை சேதப்படுத்துபவர்கள் 20 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க வாய்ப்புள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''டெஸ்லா கார்களை சேதப்படுத்துபவர்கள் மற்றும் அதற்கு நிதியளிப்பவர்கள் 20 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க வாய்ப்புள்ளது. உங்களை நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்லா சொத்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள் உள்நாட்டு பயங்கரவாதத்திற்கு குறைவானது அல்ல என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி கூறியிருந்தார். மேலும், இந்த தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களுக்கு பின்புலத்தில் இருந்து இயக்கி, நிதியளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
டெஸ்லா சொத்துக்கள் மீது வன்முறை தாக்குதல்
டெஸ்லா சொத்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள் உள்நாட்டு பயங்கரவாதத்திற்கு குறைவானது அல்ல. இதுதொடர்பாக ஏற்கனவே குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளது” என பாண்டி தெரிவித்தார்.
மேலும், இந்த தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவர்களுக்கு பின்புலத்தில் இருந்து இயக்கி, நிதியளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
டெஸ்லா வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன
லாஸ் வேகாஸில் உள்ள டெஸ்லா மோதல் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து டெஸ்லா வாகனங்கள் சேதமடைந்தன. இதுதொடர்பாக லாஸ் வேகாஸ் பெருநகர காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் அரசு செயல்திறன் துறையின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து டெஸ்லா வாகனங்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் சார்ஜிங் நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன.
அமெரிக்க பாதுகாப்புத் துறை எலான் மஸ்குக்கு விளக்கம்
இதற்கிடையில், சீனாவுடனான சாத்தியமான போர் குறித்து எலான் மஸ்க்கிற்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை விளக்கமளிக்க உள்ளது. இது எலான் மஸ்கின் அரசாங்கப் பங்கை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அவரது நலன்களுக்கு முரணானதாகவும் இருக்கும் என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகிய இரண்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பென்டகனின் முன்னணி சப்ளையராகவும், சீனாவில் அவருக்கு அதிக நிதி நலன்களும் உள்ளன. அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப்க்கு மஸ்க் மிகப்பெரிய நிதி ஆதரவாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.