ARTICLE AD BOX
‘டெஸ்ட்’ திரைப்படம் நடிகர் சித்தார்த்துக்கு சிறந்த படமாக அமையும் என கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் பாராட்டியுள்ளார்.
மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
டெஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இதில் சித்தார்த்தின் புரோமோ நேற்று வெளியானது. இதை தமிழக வீரர் அஸ்வின் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இது குறித்து சிஎஸ்கே வீரர் ஆர். அஸ்வின் கூறியதாவது:
சித்தார்த்தின் டெஸ்ட் புரோமை பார்க்கும்போது கிரிக்கெட்டில் பல காலமாக இருந்தவர்போல் இருக்கிறார். அவரது தொழில்நுட்ப புரிதல், விளையாட்டு மீதான காதல் அவரது பயிற்சிகள் எல்லாம் இன்று திரையில் தெரிகிறது.
இந்தப்படம் சித்தார்த்துக்கு சிறப்பான ஒரு படமாக இருக்கும். இந்தப் படம் வெற்றியடைய படக்குழுவுக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.