ARTICLE AD BOX
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று, சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. டெல்லியின் அடுத்த அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்த வந்த நிலையில், டெல்லியில் முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வாகியுள்ள ரேகா குப்தா டெல்லி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
வழக்கறிஞரான ரேகா குப்தா ஷாலிமார் பாக் தொகுதியிலிருந்து முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களை புறம்தள்ளி அவர் டெல்லியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லியின் முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.