ARTICLE AD BOX
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த ரேகா குப்தா (வயது 50) தேர்வு பெற்றுள்ளார். டெல்லியில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை மதியம் 12 மணியளவில், பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது. இதற்காக, துணை நிலை கவர்னர் சக்சேனாவை சந்தித்து பா.ஜ.க. சார்பில் ஆட்சியமைக்க உரிமை கோரப்படும் என கூறப்படுகிறது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள். 1 லட்சம் பேர் பங்கேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரேகா குப்தா, அரியானாவில் பிறந்தவர். கட்சியின் பெண்கள் அணி தலைவராக இருந்தவர். கல்லூரி காலத்தில் இருந்து அரசியலில் ஈடுபட்டவர். சமீபத்திய தேர்தலில் ஷாலிமர் பாக் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.